பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VIII

அதே மகன் அகாலமாய் மரணம் அடைந்தபோது, சடலம் புதைக்கப்பட்ட மறுநாள் யாருக்கும் தெரியாமல், கடுகாட்டிற்கு ஓடி புதைக்குழியைத் தோண்டி பெற்ற மகனை பார்ப்பதற்கு முயற்சித்தார். ஆக, அன்பு ஒரு வெறுப்புமுகமுடியைப் போட்டுக்கொள்ள முடியுமே தவிர, அந்த அன்பால் தனது முகத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இந்தத்தத்துவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் முதலாவது கதை

'நாமர்க்கும் குடியல்லோம்' எழுதப்பட்ட காலத்தில் மணமுடிக்க நிச்சயிக்கப்பட்ட மணமகனும், மணமகளும் திருமணத்திற்கு முன்பு பேசிக்கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் வழக்கமில்லை. ஆனால், இன்றோ தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல, இருவரும், பல இடங்களுக்குத் தனியாகவே செல்கிறார்கள். அன்றைய காலத்தில் நான் எதிர்நோக்கிய, இன்றைய காலத்துப்பெண் இதில் வரும் வேதா.

உண்மையில் எறிபவள்- இப்படி அப்பாவியாக இருக்கமுடியுமா என்ற ஒரு எண்ணம் ஏற்படலாம். ஆனால் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டிகளாக இருந்தவர்கள், கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தார்கள். அதே சமயம், லஞ்ச லவண்யங்கள் காலத்தால் மாறுவேடம் போட்டாலும், சுயங்கள் அப்படியே இருக்கின்றன என்பதைக் காட்டுக்கிற கதை.

கட்டாயம் இல்லாத காதல்- நான் வசிக்கும் பகுதியில் நடந்தது. மனைவியான அக்காள் மகள், தன்னை நிராகரிக்கப்பட்ட ஒரு இளைஞனும், கணவனால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இளம் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் ஈடுபாடு கொள்கிறார்கள். ஆனால், இருவருமே தெனாலிராமன் பூனைகளாய் போனதால், இவர்களுடைய இணைப்பும் நடைபெறவில்லை. இருவருக்குமே, சட்டம், தங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம். சட்டம் ஒன்றும் அப்படி பிடித்துக் கொள்ளாது என்று எனது அருமைத்தோழரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான வழக்கறிஞர். செந்தில்நாதன் என்னிடம் தெரிவித்த போது, நான்