பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உங்களுடன் - ஒரு
கதையாடல்''...

சு.சமுத்திரம்

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், பெரும்பாலும் இருபது ஆண்டுகளாக பழமை உடையவை. இதுவரை இந்தக் கதைகள் நிற்கின்றன. இனிமேல் நிற்குமா என்பதைக் காலந்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனாலும், அந்தக்காலத்தில், வைகை ஆற்றுக்கு எதிராக நல்ல படைப்புகள் எதிர்நீச்சல் போட்டதாக அறிகிறோம். ஆனால், இந்தக்காலத்தில், சில இலக்கிய தலிவான்கள் உருவாக்கும் குட்டைக்குள் எதிர்நீச்சல் போட வேண்டிய அவலநிலை இலக்கியத்திற்கு ஏற்பட்டுள்ளது. என்றாலும், இந்தக் குட்டையும், இவற்றை அரிக்கும் இலக்கிய கொசுக்களும், மக்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்படும் என்று நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமரர் கல்கியை தூற்றியவர்களே இன்று அவருக்குப் பல்லக்கு தூக்கும் காலக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கதையின் பின்னணி அனுபவங்களை பற்றி வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தத் தொகுப்பின் முதல் கதையான தானாடி-சதையாடி. ஒரு அன்பு பிரபாகத்தில் நீச்சல் அடிக்கிறது. இந்த அன்பு, பாசம் இருக்கிறதே, இவை மகத்தான மாறுவேடதாரிகள். எங்கள் ஊர்ப் பக்கம், தன் மகனைப் படிக்க வைத்த ஒரு பெரியவர், அவனால் கல்லூரியில் இழிவுப்படுத்தபட்டதும், ஆண்டுக் கணக்கில், அவன் முகத்தை ஏறேடுத்துப் பார்க்கவே மறுத்தார். வெறுத்தார். ஆனால்,