பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI


சேவையை, இவரது அனைத்துக் கதைகளிலும் ரசிக்கலாம். ருசிக்கலாம். திருந்தக்கூடாது என்று பிடிவாதமான, திடவாதமான மனோ இயல்பு கொண்ட மூர்க்கர்கள்கூட தங்களை அறியாமல், ஒரளவாவது பண்படுவார்கள்.

மெஸேஜ் மெஸேஜ் என்று ஏன் தேடுகிறார்கள்? தமிழகத்தில் மேஸேஜைத் தவிர என்ன இருக்கிறது? மற்றவர்களைக் காட்டிலும் சமுத்திரத்தின் திவ்ய சஷூக்களுக்கு, அந்த மேஸேஜ் தெளிவாகப் புலப்படுகிறது. நன்றி.

ஆழ முகிழ்ந்து எடுத்த மனிதநேயத்தின் பண்பாட்டுத் தத்துவங்களை வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் விநியோகிக்கும், பிரசார பிராண்டு அற்ற மனித நேய உணர்வே அவரது எழுத்துக்களின் வசீகரத்துக்கும், வாழ்வுக்கும் காரணங்களாக அமைந்துள்ளன.

புதுமைப்பித்தனிலிருந்து ஜெயகாந்தனில் இருந்து வேறுபட்ட ஒர் எழுத்து மேதை சமுத்திரம். இவரது வார்ப்புகள் மனிதக் கட்சியைச் சார்ந்தவை.

பழையவர்கள் மணிக்கொடிக் காலம் என்ற ஒன்றைச் சடங்காகக் கொண்டாடுவார்கள். சமுத்திரம், மனிதக்கொடி கால எழுத்தாளர் என்பதைத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது.