பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

 ரசிக்கலாம். ஆகவே இம்மாதிரியான சிற்பங்கள் பத்திரிகை உலகுக்கு ஒரு கட்டாயத் தேவை.

சமுத்திரத்துக்கு, ஒரு ராகம் உண்டு. அவரே கண்டு பிடித்துள்ள ராகம் பொருளாதாரத்திலோ, சமூக அந்தஸ்திலோ, சாதிசமயங்களிலோ அமுக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டு ஜடமாகி விட்டவர்களை மனிதராக்கி - மகோன்னதமாக்கிக் காட்டும் ரசவித்தையாளர்.

கொட்டாவிக் கச்சேரி செய்ய, சமுத்திர பாகவதருக்குத் தெரியாது. அன்றே, 'என் ஆவியும், உயிரும் குன்றே அனையாய் ஆட்கொண்டனையே’ என்ற மாணிக்கவாசகரின் வரிகளில் வரும் ஆவியை-ஆன்மாவை உணரச் செய்யும் கருத்துச்சேரி, இவரது கதைச் சேரி.

அனைத்துக் கதைகளிலும் சிறிதும் மழுங்கவே மழுங்காத வைர ஊசி போன்ற உறுதியான கண்ணோட்டம். சமூக சீர்த்திருத்த நையாண்டி, இந்தச் சமுத்திரத்தில் விழுந்தால் வேஷக்காரர்களின் அரிதாரம் கரைவதைத் தவிர, வேறு வழியே இல்லை.

அரசு அதிகாரிகள், அரசு சிப்பந்திகள், மேல் தட்டினர் ஹிப்போக்கிரைட்ஸ் எனப்படும் மித்யாசாரர்கள் - ஆகிய இவர்களுடைய உலகத்தில் புகுந்து, நம்மால் அடிபட முடியாது. ஆனால் அத்தகைய அடிகளும் ரணங்களும் எப்படி இருக்கும், ரணப்படுத்துகிறவர்களின் வக்கிரங்கள் எப்படி இருக்கும், ரணப்படுகிறவர்களின் சதையும் மனசும் எப்படித் துடிக்கும் என்பதைச் சமுத்திரத்தின் கதைகள் மூலம் அனுபவித்து விடலாம்.

கதைகளைப் படிக்கும் போதே, நமது ஆழ்மனத்தில் நல் சிந்தனைகளை மேலெழுப்பி நம்மை உயர்த்தும், உயர்ந்த