பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

சு. சமுத்திரம்,வார்த்தைகளை எடுத்து ஆளுகிற லாகவம், வாசகர்களை அழுத்தமாக ரசிக்க வைக்கிறது.

மூத்த மகளை, அப்பா ஒரு படிக்காதவனுக்கு கட்டிவைத்தார். இளைய மகளுக்கு ஒரு சேஞ்ச்சுக்காக, படித்த மாப்பிள்ளையாகப் பார்த்து கட்டி வைத்தார். அவன், மாசக் கடைசியில் சேஞ்சே இல்லாத ஆபீஸ் சூப்பிரென்டன்ட் என்று தெரிகிறது. அடிக்கிற அடியில், புளியங்காய் கொத்தாகக் கீழே விழுகிற மாதிரிதான் கதையில் கடைசி பகுதி அமைகிறது.

எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளுக்கு ஒரு பிடி சோற்றுக்கு வழி பண்ண லாயக்கில்லாத கணவன், ஆபீசில், எந்த லஞ்சத்துக்கும் மசியாதவனாக என் பொண்டாட்டி பகட்டுக்கும், சேலைக்கும் பணம் கேட்டுத் தாலியைக் கழட்டி எறிகிறவள் அல்ல, என்னோட நேர்மையைத் தன்னுடைய தாலி பாக்கியமாக நினைக்கிறவள் என்று சொல்லும்போது மனுஷங்க இருக்க வேண்டிய இடம் எது என்கிறதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார். இது கதைத் தலைப்பாகக் காட்டி இருப்பது சாலப் பொருத்தமே.

சொந்த வாழ்க்கையை மனித நேயத்தோடு வாழ்கிறவர்களால் தான் இலக்கியவாதியாகவும் திகழ முடியும்.

கூலிக்கும், புகழுக்கும் எழுதுகிறவன் எழுத்து, நன்றாகவே விற்பனையாகும். அவை, அன்றாடம் சமையலுக்குத் தேவையான காய்கறிகள். அவையும், அவசியந்தான். ஆனால் பார்முனை பேனா வியாபாரியின் கிறுக்கல்களை யனார்டாடோவின்ஸியின் ஒவியங்களோடு ஒப்பிடக்கூடாது.

சமையலறைக்குள் டோடா வின்ஸிகள் வராவிட்டாலும் சமையலறையில் உள்ளவர்கள், ஓவியக் கண்காட்சிக்குப் போகலாம்.