பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IX

ஆலோசனை கூற முடியாத அளவிற்கு, அந்தப் பெண் எங்கோ போய்விட்டாள். ஆகையால், எதிர்காலத்தில் அல்லாடும் இப்படிப்பட்ட இளம் தலைமுறையினருக்கு இந்தச் சிறுகதை வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

கா. கா. கா. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒருவரைப் பற்றிய பதிவு. நல்ல மனிதர். மனதில் ஏதோ ஒரு பயப்பிராந்தி இருந்ததால் காக்காத்தனங்களில், ஈடுப்பட்டிருக்கலாம் என்று இப்போது எனது அனுபவம் கூறுகிறது. ஆனால், அப்போதோ அவரைக் கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதை. நல்ல வேளையாக, கதையில் நான் கொடுத்த தண்டனை அவருக்கு நேரவில்லை என்பது எனக்கு ஒரு ஆறுதல்,

சுதந்தர மாடன் சிறுகதை, நாடு முன்னேறி உள்ள அளவிற்கு நாட்டு மக்கள் முன்னேற வில்லை என்பதைத் தெரிவிக்கும் கதை. இப்படிப்பட்ட, பல சிறுவர்களைக் கண் முன்னால் பார்த்திருக்கிறேன். இது, தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்று அமைப்புகளுக்கும் இப்போதும் பொருந்தும்.

இடஒதுக்கீடு- அல்லும் பகலும் உழைக்கும் ஒரு அரசு வாகன டிரைவரை, அதிகாரிகள் எப்படி இழிவாக நடத்துகிறார்கள் என்பதைச் சித்தரிக்கிறது. அதே டிரைவர், சட்டம்பேசினால், இந்த அதிகாரிகளின் நிலைமை என்னவாகும் என்பதைக் கதை எடுத்துக் கூறுகிறது. இந்த மாதிரியான டிரைவர்களை மையப்படுத்தி, ஐந்தாறு சிறுகதைகளைப் பல்வேறு பார்வையில் எழுதியிருக்கிறேன். பல அதிகாரிகள் பந்தாக்களை விடமுடியாமல், டிரைவர்களைப் பந்தாடும்போது, அவர்களது கள்ளப் பயணம் வெளிப்பட்டுப் பந்தா பறிபோய்விடுகிறது.

டிராக்டர் தரிசனம், அந்தக் காலத்து விவசாயப் புதுமை. கல்கி பத்திரிகை, இதைப் பற்றி எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு இணங்க, எழுதப்பட்ட கதை. ஆனாலும், கதையில் பாதி பக்கங்களை