பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X

கரையான் தின்றுவிட்டது. ஆகையால், மீதியை நான் ஒப்பேத்தி இருக்கிறேன். பழைய சுவை இந்த ஒப்பேத்தலில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும், சுவை குறைவுதானே தவிர சுவையற்றது அல்ல.

வினை - விதை- எதிர்காலமுதியவர்களுக்கு ஒருபடிப்பினை. இந்தக் கதையே, அதைத் தானாகக் கூறுகிறது. பிஞ்சுப் பிராயத்தில், எந்த தாக்கத்தையும், தாத்பரியம் இல்லாமல் உள்வாங்கிக்கொள்ளும் சிறுவர்-சிறுமியர்களிடம் பெற்றவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், அதற்கு அன்பே அடிப்படையாக இருந்தாலும், அந்த அன்பு, பாராமுகத்தில் கொண்டு போய்விடும் என்ற அனுபவப் பகிர்வே இந்தக் கதை. இதனால், பெற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தவிர்க்க முடியாது ஏற்பட்டுவிடும் என்பதைக் சுட்டிக்காட்டும் சிறுகதை.

தலைப்புக் கதையான தராசு, முதல் தலைமுறை அலுவலர்களிடமிருந்து பெற்றோரும், உற்றோரும், மனைவியும், மக்களும் சம்திங்காக எதிர்பார்ப்பது உண்டு. ஒரு அலுவலர் தன்னளவில் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது. எளிமை இல்லாமல், நேர்மை இல்லை என்பதைக் குடும்பத்தினருக்கும் உணர்த்தி, அவர்களை அப்படி வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும். என்னளவில் வெற்றி பெற்ற இந்த அனுபவத்தை ஒரு சிறுகதையாக்கி உலாவிட்டிருக்கிறேன்.

பாவலாக்கள் மூலமாகவே நமது அரசாங்கம் நடைபெற்று வருகிறது என்பதை மத்திய அரசு அலுவலர் என்ற முறையில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இந்த அனுபவ பின்னணியே, இந்தக் கதை. இது, இந்தத் தொகுப்பின் வாசிப்பில் ஒரு கலகலப்பு ஏற்படுத்துவதற்காக சேர்க்கப்பட்டது.

ஒரு எழுத்தாளன், தான் படித்தறிந்த ஒரு தகவலை வைத்தும், கதை பண்ண முடியும் என்பதற்கு ஒன்றுக்குள் இரண்டு ஒரு எடுத்துக்காட்டு, ஒரே மாதிரியான மனோநிலையில் உள்ளவர்கள்,