பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 க. சமுத்திரம் பார்க்கும்போது, மிகமிகப் பணிவாக நடந்து கொள்வதென்று தீர்மானித்தான். 'அடுத்த தடவை வந்தது. கம்பெனியின் நுழைவாயிலில் காரில் இருந்து இறங்கிய மேனேஜரைப் பார்த்து, ஸ்கூட்டரில் இறங்கிய அக்கெளன்டென்ட், குட்மார்னிங் ஸ்ார். ஆபீஸிற்கு வாரீங்களா என்று கேட்டு வைத்தான். மானேஜர் சதாசிவம், அவனை ஏற இறங்கப் பார்த்தான். ஆபீஸிற்குள் தான் நுழைவதைப் பார்த்த பிறகும் ஆபீஸிற்கு வாரீங்களான்னு கேட்டால் என்ன அர்த்தம்? இவன், திமிரை அடக்காமல் விட்டால், அவன், லண்டனில் பிஸினஸ் அட்மினிஷ்ட் ரேஷன் கோர்ஸ் படித்ததில் அர்த்தமே இல்லை. அக்கெளன்டன்டுக்கு, பதில் வணக்கம் செலுத்தாமல் 'யூ மீட் மி இன் மை ரூம் என்று கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக லிப்டிற்குள் நுழைந்தான். அக்கெளன்டன்ட் கந்தரத்தின்,ரத்தம் கொதித்தது.மரியாதை கொடுத்தால், இந்த மேனேஜருக்கு மரியாதை தெரியவில்லையே! இருக்கட்டும். இருக்கட்டும். இரண்டில் ஒன்றை பார்த்து விடலாம். மானேஜர் சொன்னபடி அவன் பார்க்கவில்லை.பியூன் வந்து சொன்னபிறகு, கால்மணி நேரம் கழித்து மானேஜர் அறைக்குப் போனான். அப்போது,மேனேஜர், அவனைக் அழைத்ததை மறந்தவன் போல் பாவலா செய்து கொண்டே, ஒரு இளம் பெண்ணுடன் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தான். "சரண்சிங், நேருவின் பொருளாதாரக் கொள்கையை தாக்கியிருந்தார் பார்த்திங்களா? உங்க அபிப்ராயம் என்ன மேடம்? அந்தப் பெண் (அழகானவள்) மானேஜரிடம் ஏதோ பேசப் போனாள்.அதற்குள் அங்கே நின்றுகொண்டிருந்த அக்கெளன்டன்ட் கந்தரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே "நம் நாட்டுக்கு"