பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுக்குள் இரண்டு 炒 ஹெவி இண்டஸ்ரிஸும் முக்கியம்தான். அதேமாதிரி காட்டேஜ் இண்டஸ்ரிஸும்” என்று பேசிக் கொண்டே போனான். அந்த இளம் பெண், மானேஜரை விட்டு விட்டு கந்தரத்தைப் பார்த்தாள். எதிரே உள்ள நாற்காலியில், கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, அக்கெளன்டன்ட் பேசியது மானேஜர் சதாசிவத்திற்கு சகிக்கவில்லை. போதாக்குறைக்கு அந்தப் பெண் அவனையே பார்க்கிறாள். இப்போது சதாசிவம், அவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும். 'இம்ப்ரஸ் செய்தான். "மிஸ்டர் சுந்தரம் நான் உங்களை கவனிச்சுக்கிட்டே வரேன். பத்து மணிக்கு ஆபீஸ், வழக்கமாய் பத்தரை மணிக்கு வந்தால் வாட் டஸ் இட் மீன் "நீங்க வந்த சமயத்துல நானும் வந்துடுறேனே.” அந்த இளம் பெண், அக்கெளன்டன்டின் பதிவில் ஒளிந்திருக்கும் சட்டயரை, ரசித்தவள்போல், லேசாக சிரித்துத் தொலைத்தாள். மானேஜர் சதாசிவத்திற்குரத்தம் கொதித்தது.ஒருபெண்ணின் முன்னால், பெரிய பதவியில் இருக்கும் அவனை, ஒரு சின்னப் பதவிக்காரன், அவமானப் படுத்துவதா? முடியாது; விட முடியாது. "மிஸ்டர் கந்தரம் டோன்ட் யூ நோ மேனர்ஸ்? பிளிஸ் கெட் அப். எழுந்து நின்னு பதில் சொல்லுங்க. ஏன் லேட்டாய் வந்திங்க? ஐ ஸ்ே ஒய் ஆர் யூ லேட்." அக்கெளன்டன்ட் சுந்தரம், எழுந்தான். ஒரு பெண்ணின் முன்னால் அவனை அவமானப்படுத்துவதா? மானேர்ஸ் இல்லாமல் பேசுவதா? அவன் பதில் சொல்லாமல் இருந்தால், அவனைப்பற்றி என்ன நினைப்பாள்?