பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தானாடி சதையாடி 3


சொன்னபடியே முகத்தைத் திருப்பி, முன் நெற்றியைச் சுவரில் சாய்த்தபடி கேவிக் கேவி அழுதாள்.

சித்திரசேனன், குழந்தைகளை இரண்டு விலாப் பக்கமும் அணைத்தபடி, எல்லோரையும் தர்ம சங்கடமாகப் பார்த்தபோது, கவரிலே தலைபோட்ட ராசம்மா, திடீரென்று முகத்தைத் திருப்பி, அவனை முகத்தால் முட்டப்போவதுபோல் நெருங்கினாள். இரண்டு பிள்ளைகளின் முதுகுகளிலும் இரண்டு கைகளால் பட்டுப் பட்டென்று சாதிவிட்டு -
பிறகு, மகன் ஆறுமுகத்தை, குனிந்து அவன் காதை நிமிர்த்தி பின்பகுதியைக் காட்டினாள். அதில் நகப் பதியல் இருந்தது. ரத்தச் சுவடு மங்கி, காது ஒட்டுப்போட்டு தைக்கப்பட்ட சதைப் பகுதி போல் காட்டியது. ராசம்மா, மகனை விட்டுவிட்டு, மகளைத் திருப்பி, அவள் பிடரியைக் காட்டினாள். அது லேசாக வீங்கியிருந்தது. அம்மா, அடிப்பாள் என்று பயந்துபோய், இன்னும் முதுகை குனிந்து வைத்திருந்த ஆறுமுகம் பயல் நிமிர்ந்தான். அடக்கி வைத்த வார்த்தைகளை ஆவேசமாகக் கத்தினான்.

"அப்பாப்பா. சித்தப்பா..."

"ஏல...! எவனப்போயி சித்தப்பான்னு சொல்லுதே. நடந்தத மட்டும் சொல்லுலே...”
அந்தப் பயல், நாய்மாமன் போல் குலைத்த தாய் மாமனைப் பயத்தோடு பார்த்துவிட்டு, தந்தையிடம் பாசத்தோடு சொன்னான்.

"அப்பாப்பா... அந்தத் துரை சித்தப்பா... தப்புத் தப்பு... படபடத்தான்.துரை. என் காதைப்பிடிச்சு. அந்தரத்துல அப்படியே துக்குனாம்பா... காது ரெண்டும் பிஞ்சுட்டுப்பா... என்கிட்டே வந்த தங்கச்சி தலையை வளைச்சுப் பிடிச்சு அடிச்சுட்டான். அம்மாவை வேற அரிவாளை எடுத்துட்டு வெட்டப் போனாம்பா. அம்மாவைக் கொல்றதுக்குன்னே அரிவாளை வச்சுட்டே இருந்தாம்பா"