பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 சு. சமுத்திரம்

பிடரியில அடிச்சுட்டேன். அதுக்காவ என்மனசு என்னபாடுபட்டுது தெரியுமா? அப்புறம் வழியில போன உன் பிள்ளியளுக்கு, கடல மிட்டாய் வாங்கிக்கூட குடுத்தேன். அம்மாக்காரி சொல்லிக் கொடுத்தது மாதிரி, அந்த மிட்டாயை என் மேல காறித்துப்பி எறியுதுக. நெசமாவே சொல்லபோனா, அண்ணன்-தம்பியைப் பிரிக்கிற உன் பொண்டாட்டிய, நெசமாவே வெட்டிப் போடணும். நான் அப்படி வெட்டாம விட்டதுக்கு நீ சந்தோஷப்படனும்."

'இதே மாதிரி ஒன் பொண்டாட்டிய நான் வெட்டிப் போடட்டுமா?

'உன் கொழுந்தியாள நீ என்ன வேணுமுன்னாலும் செய்துட்டுப் போ. உனக்கு இல்லாத அவமானமா எனக்கு.? கண்ணால கண்டதும் பொய்யி... காதால கேக்கறதும் பொய்யி... தீர விசாரிக்கிறதே மெய்யின்னு ஒரு சொலவடை இருக்கு. நீ படிச்சாதானே உனக்குத் தெரியும்? இன்னும் கேட்பார் பேச்ச கேக்குற மிருகமாத்தான் இருக்கே?


"யாருல மிருகம். இதுக்கு மேலபேசின. கழுத்த கடிச்சி ரத்தத்த குடிச்சிடுவேன்.' 'ஒன் கழுத்து இருந்தாதானே, அப்படி குடிக்கதுக்கு? நீ அண்ணனா பேசல. பங்காளியா பேசுற. நீ எத்தன தெம்மாடி பயவள கூட்டி வந்தாலும் நான் கவலப்படல. வேணுமுன்னா பார்த்துபுடலாம்.'

மச்சான்காரன் வைத்திலிங்கம், சண்டைக்கு முன்னுரையாக, ஒரு கேள்வி கேட்டான்.

"என் தங்கச்சி, இவரு பொண்டாட்டியா? இல்ல. ஒன் பொண்டாட்டியால? இப்பவே எனக்குத் தெரியணும்.”

'அட போய்யா. ஒனக்குத் தெரியாதா அண்ணன் பொண்டாட்டி அரப் பொண்டாட்டி... தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டின்னு ஒரு சொலவடை இருக்கு"