பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தானாடி சதையாடி

துரை, ஒரளவு பயந்தும், ஒரளவு இயல்பாகவும் விவகாரத்தை சாதாரணமாக ஆக்கப் போனான். அதற்குள், பெரிய மச்சான்காரன், அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில், துரையை மல்லாக்கக் கிடத்தினான். மைத்துனன் மயில்வாகனன், அவன் மார்பில் வலது காலை வைத்து ஆழப் பதித்தான். பிறகு, அதே பாத விரல்களால், அவனது மோவாயை கால் நகங்களால் குத்திக் குத்தி எதிரியின் முகத்தை மேலே மேலே நிமிட்டினான். துரை, மரண வலியில் துடித்தான். அதே சமயம், ‘என்னை விட்டுங்க என்று சொல்லப் போன வார்த்தைகளை கடித்துக் கொண்டான். நடந்ததை பார்த்துக் கொண்டு நின்ற சித்திரசேனனுக்கு, என்னவோபோல் இருந்தது.தம்பியை இடுப்பில் எடுத்ததும்,தோளில் தூக்கியதும், நினைவுக்கு வந்தன. இவன் அடிக்கும் போதெல்லாம், அவனால் திருப்பிக் கொடுக்க முடியும் என்றாலும், தலைகுனிந்து செல்லும் அன்றைய தம்பி, அவன் நெஞ்சில் நிரலாடினான். ஒரு தடவை, தோட்டத்தில், கள்ளத் தேங்காய் பறித்ததாக தன் மீது குற்றஞ்சாட்டிய தெற்குத் தெருகாரப் பயல்கள் இரண்டு பேரை நோக்கி, தம்பி, அரிவாளோடு பாயந்ததும் நினைவுக்கு வந்தது."எங்க அண்ணாச்சி சம்மதிக்காம, நான் எந்த பெண்ணையும் கல்யாணம் பண்ண மாட்டேன்’ என்று அடிக்கடி சொன்னதும் கூர்மையாகக் குத்தியது. சித்திரசேனன், மச்சான்கள் மீது பாய்ந்தான்.பெரியமச்சானை பிடரியில் இரண்டு போடுபோட்டு தென் பக்கமாக உருட்டி விட்டான்.தம்பியின் மார்பில் காலை அழுத்தியமைத்துனின்மார்பில் ஒரு குத்துக் குத்தி அவனை மல்லாக்க விழச் செய்தான். பிறகு, தம்பியை நிமிர்த்தி, தன்னோடு அனைத்துக் கொண்டான். நிலவளம் 1990 ©