பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாமார்க்கும் குடியல்லோம்

அந்தப் புத்தகம், வேதா, உதடுகளை பெருமளவு பிரிய வைக்காமல், அதே சமயம் அவற்றுக்கு இடையே ஒரு வெண்கோட்டைப் போட்டது. அந்தச் சமயம் பார்த்து டெலிபோன் மணி அடித்தது. அவள் வேண்டா வெறுப்பாய் எழுந்துபுத்தகத்தை தொலைக்காட்சிப்பெட்டி மேல் வைத்துவிட்டு,கூடாரம் போன்ற முகப்பு அறையிலிருந்துஉள்ளறைக்குள் ஒடியபோது, அந்த டெலிபோன் மூச்சடங்கியது. சிறிதுநேரம் அங்கேயே காத்து நின்றாள். ஒரு வேளை 'கட்டாகாமல்' லைனில் இருப்பார்களோ என்று மீண்டும் ரிசீவரை எடுத்தாள். அதுவோ, வெறுமனே இருப்பதைக் காட்டும் வகையில் பழைய காலத்து கிறிஸ்துவப் பாடல் போல ஒலித்தது.

  வேதா, மீண்டும் முகப்பறைக்குள் வந்து அந்தப் புத்தகத்தைப் பிரித்தாள். பெரும்பாலும் ஆண்மையற்றவனே மனைவியைச் சந்தேகிப்பான். அதேபோல் சில பெண்கள் சிடுசிடுவென்று இருப்பதற்கு அவர்கள் இல்லற சுகத்தில் ஏமாற்றமுற்றதே காரணம்' என்ற வரிகளை எந்தப் பக்கத்தில் படித்தது என்பது புரியாமல் பக்கங்களைப் புரட்டினாள். கல்யாணமான தோழியிடமிருந்து ரகசியமாக வாங்கிய புத்தகம். எப்படியோ அந்த வரிகளைக் கண்டுபிடித்த அவள், சிறிது சிந்தித்தபோது, மீண்டும் டெலிபோன் ஒலித்தது. அவள் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே முனங்கிக் கொண்டு நடந்தாள். டெலிபோனை எடுத்தால் மீண்டும் வெறுமனே ஒலித்தது. பழையபடியும் புத்தகத்திலிருந்து கண்ணை நகர்த்தாமல், அவள் நடந்தபோது, மீண்டும் அது ஒலித்தது. முன்பு