பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமார்க்கும் குடியல்லோம் 竹 மாதிரி மிட்டாய்க்காரர் மணி மாதிரி அடிக்காமல், ஆலயமணி போல் தொடர்ந்து ஒலித்தது. அவள் அதைப் பொருட்படுத்தாமல் புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்தாலும், அந்த டெலிபோன் ஒலியும் விடப்போவதில்லை என்பதுபோல் அடித்துக் கொண்டே இருந்தது. டெலிபோன் செய்த எதிர்முனை ஆளை அவள் மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டு நிதானமாக நடந்து, அதன் குமிழை எடுத்து, எதிர்தரப்புக் குரல் கேட்கும் முன்பே தன்குரலைத் தாவவிட்டாள். "ஹலோ.என்ன. யார் பேசறதா? முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க. இது என்னடா வம்பா போச்சு? நான் யாருன்னு உங்களுக்கு எதுக்காகத் தெரியணும்? நீங்க யாரு?" அவள், டெலிபோன் குமிழை முகத்துக்கு நேராக, மைக் மாதிரி பிடித்துக்கொண்டு யோசித்தாள். அந்தக் குமிழோ நேருக்கு நேர் பேகவது போல் "ஹலோ, ஹலோ, நான்தான், நான்தான்" என்று கத்தியது. அப்படியும் அவள் மசியவில்லை. பல வீடுகளில் சம்பந்தா சம்பந்தாமில்லாதவர்கள் டெலிபோன் டைரக்டரிகளைப் பார்த்துசில எண்களைச் சுழற்றி அப்பாவி பெண்களின் வாய்களைக் கிளறுவார்களாம். ஒரு சில பெண்கள் கூட இப்படிப்பட்ட டெலி போன்களால் ராங் நம்பராகியிருப்பதாகவும் கேள்விப்பட்டு இருக்கிறாள். அவள் மின்னல் வேகத்தில் சிந்தித்தாள். எதிர்முனைக் குரல் ஆண்குரல் கேட்ட குரல் மாதிரி ஒலித்தாலும், அதுகெட்ட குரலாகவும் இருக்கலாம். அந்தக் குரலோடு பேச்சுக் கொடுத்து டெலிபோன் நம்பரை வாங்கி போலீசுக்கு புகார் செய்யலாமா? இப்படித்தான், அவள் அலுவலகத்தில் ஒருத்தியுடன் அத்துமீறி டெலிபோனில் பேசியவனை மாட்ட வைத்தாள். ஆனால், அந்தப் பயலோ, தனக்கும், தான் டெலிபோன் செய்த பெண்ணுக்கும் ஒரு இது இருந்ததாகச் சொல்லித்தப்பிக்கப்பார்த்தான்.இந்த மாதிரி தனக்கும்வரக்கூடாது. அதுவும் கல்யாணம் நிச்சயித்த பிறகு