பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

炒 க. சமுத்திரம் இதற்குள் டெலிபோன் வாய் அலறியடித்துக் கதறியது. “ஹலோ. ஹலோ, ஒன் மினிட் பிளிஸ். நான் சொல்றதக் கேளுங்க ப்ளீஸ்... ஒன் மினிட் பிளிஸ். நானே நான்தான். வேதா எதிர்முனைக்காரன் முகத்தில் அறைவதுபோல், டெலி போனை வைக்கப் போனாள். அப்படி வைத்தால், மீண்டும் டெலி போன் செய்வான். என்னதான் செய்திடுவான்? அதையுந்தான் பாத்திடலாமே. அவள், டெலிபோன் வாயைக்காதில் வைத்துக் கேட்டாள். "யாருங்க. சஞ்சையா? நெசமாவா? நானா? நான்தான். நானேதான். நீங்க.." அவளுக்கு ஒரு பயம். வேறு எவனோ ஒருவன், போன புதன் கிழமை வீட்டில் நடந்ததைக் கண்டறிந்து, இப்படிப் பேசலாமே?. அவள் உஷாரானாள். பேசுவது சஞ்சய்தான் என்று கிட்டத்தட்ட உறுதியானாலும், மிமிக்கிரி கலையில் கைவந்தவர்கள் இருப்பதைக் கணக்கிலெடுத்து “உங்க டெலிபோன் நம்பரைச் சொல்லுங்க. நான் ரிங் பண்றேன். ஃபோர் செவன்.நோ. உங்க மேல. நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமில்ல. ஒருத்தர் கொடுக்கிற ரூபா நோட்டுகளை எண்ணுகிறோமுன்னா, அவர்மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமா? எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான். ஓ.கே. போனை வையுங்க...மூணு நிமிஷத்தில கூப்பிடறேன்.” என்றாள். வேதா, பதட்டப்பட்டாள். பரவசப்பட்டாள். அங்கேயே இருந்த தனது கைப்பையை, எங்கெல்லாமோ போய்த் தேடினாள். தம்பி, தங்கைகளை திட்டினாள். பிறகு டெலிபோன் மேஜைப்பக்கமே, அது இருப்பதைப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே செல்வமாகத் திட்டிக்கொண்டு, அந்தப் பையின் வாய் மூடிய ஜிப்பைத் திறந்து உள்ளே குடைந்தாள். வழுவழுப்பான கண்ணாடி மாதிரியான ஒரு விசிட்டிங் கார் கார்டில் மூன்று வரிசைகளில் முத்து முத்தான டபுள் கலர் எழுத்துக்கள். சஞ்சய், கம்ப்யூட்டர் இன்ஜினியர். அதே நம்பர்.