பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமார்க்கும் குடியல்லோம் 13 வேதா, டெலிபோன் நம்பர்களை ஒவ்வொன்றாய் அழுத்தினாள். அவசரத்தில் நான்கு ஐந்தாகிவிட்டது. யாரிடமோ திட்டு வாங்கினாள். பிறகு அவசரப்பட்டாள். அய்யய்யோ. தப்பா நினைப்பாரே... மூணு நிமிஷம் பத்து நிமிஷமாயிட்டே... நான் உதாசீனம் செய்யுறதா நினைச்சிடப்படாதே. சே. இப்ப பார்த்து ஒரு டெலிபோன். ஒரு வேளை அவரா?. யாரு? கமலாவா? நான் வேதா இல்ல. எத்தனை தடவை சொல்றது. ராங்க் நம்பர். வையுங்க போனை' வேதா, சத்தம் போட்ட டெலியோனை- அதன் கழுத்தை, தனது மனச்சாட்சியை நெறிப்பதுபோல் நெறித்து, கீழே வைத்தாள். மீண்டும் எடுத்தாள். "அப்பாடா. நல்லலவேளையா லைன் கெடச்சிட்டு. "ஹலோ.., சஞ்சயா. ஸாரி. மிஸ்டர் சஞ்சயா? ஏன் அப்படி கேட்கிறீங்க...நான் வேதாதான் பேகறேன். வீட்ல யாருமில்ல. என்ன விஷயம்?. ஸாரி. நான் ரூடாய் பேசலை. அப்பாக்கிட்ட ஏதாவது பேசனுமான்னு கேக்கத்தான் அப்படிக் கேட்டேன. அப்பாவா? அவரு, அம்மா, அண்ணி எல்லாரும் எனக்கு நகை வாங்கப்போயிருக்காங்க. அவங்ககிட்ட ஏதாவது சொல்லணுமா? என்ன சொல்றீங்க..? உங்களைப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பெரியவங்க நிச்சயம் செய்ததை கட்டித்தானேஆகணும்? நோ. நோ. இந்த மாதிரி பேசுறது முறையா? அதுவும் இப்பவே. ஸாரி. என்கிட்ட தப்பாகக் கேட்டிங்கன்னு சொல்லவை. அதுக்கு நான் பதில் சொல்றதுதான் தப்புன்னு சொல்ல வந்தேன். சரி. சரி. ஆம். அதுக்காக..' வேதா, டெலிபோன் குமிழை கன்னத்தில் உரசியபடியே யோசித்தாள். அவனின் ஹலோ ஹலோ குரல், அவள் கன்னத்தில் அவன் உதடுகளாய் உரகவது போல் கூச்சப்பட்டாள். டெலிபோனை மீண்டும் காதுப்பக்கம் கொண்டு போனாள். அவன், அவள் காதுக்குள் வாயை வைத்து கிககிகப்பது போன்ற உணர்வு.