பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 க.சமுத்திரம்


அந்த உணர்வின் வளர்பிறையான நாணம்... அது தூண்டிவிட்ட
சிந்தனை, தனக்குள்ளயே இப்படி மெளனமாக, உதட்டை     
அசைக்காமல் மனதுக்குள்ளயே பேசிக் கொண்டது.
       'இப்படி பேகறவர்கிட்ட எப்படி பேசுறதாம்? அவரை மாதிரி 
என்னால் வர்ணிக்க முடியுமா? ஆனாலும், நல்ல ரசிகர்தான்... என் 
அழகைவிட தோரணை ரொம்ப பிடிச்சிருக்காமே... அப்போ நான் 
அழகில்லாதவளா? 'அப்புறம்' கவனிச்சுக்கலாம். அவர        

தலைகுனிந்து பார்க்காமல் நேருக்கு நேராப் பார்த்தது அதிகமாப் பிடிச்சுப் போச்சாம்... இவரு மட்டும் என்னவாம்? சூட்டு, கோட்டுன்னு அமர்க்களப்படுத்தாமல் சாதாரண உடைக்கே எவ்வளவு கம்பீரம் கொடுத்தார்? ஒவ்வொரு கேள்விக்கும் அதை உள்வாங்குவது போல் அவர் முகம் காட்டிய கம்பீரமும், அதற்குப் பதிலளிக்கும்போது முகத்தைக் குழைத்த இனிமையும், பேகம்போது குறுக்கிட நினைத்துபோல் ஆள்காட்டிவிரலைத் துாக்கி முகத்தை நிமிர்த்தி, பேசுகிறவரை தனது பேச்சால் முறியடிக்காமல் பேசியவரின் கவனத்தைக் கவர கையாண்ட நளினிமான உத்தியும் - எல்லாவற்றிற்கும் மேல் அந்த ஆளுமையான தோற்றமும். வேதா, அதிக நேரம் சிந்திக்க அவகாசம் கொடுக்காமல் கன்னத்தில் உரசிய டெலிபோன் குமிழை வாயருகே கொண்டு வந்து, சிறிய உதறலோடும், உற்சாகத்தோடும் தத்தித் தத்திப் பேசினாள். 'நீங்க பிடிக்காட்டி இப்படிப் பேகவனா? நீங்க சொல்லிட்டிங்க. நான் சொல்லலை. என்ன குரல் நடுங்குதா? நோ. நோ. பதிபக்தி இல்லை. பயபக்தி. ஆமா.. நானும் கவிதை எழுதியிருக்கிறேன். சரி. வச்சுடட்டுமா? என்னடா இது. ஸாரி உங்களை'டா போடலை. எவ்வளவு நேரமா பேகறதுன்னு சொல்ல வந்தேன். வாட்? ஒரு நிமிஷம் பெர்மிஷன் கொடுக்கணுமா? சொல்லுங்க.