பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமார்க்கும் குடியல்லோம் 15 வேதா, லேசாய் சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு அலையலையாய் அந்த டெலிபோன் குமிழுக்குள் பாய்ந்து, துள்ளிக் குதித்து, ஒளி வேகத்தில் மாறுவேடம் போட்டு, மீண்டும் ஒலியாய் மாறி, எதிர்தரப்புக் காதில் உரசியது. அந்த உந்து சக்தியில், அவன் பேசப் பேச, இவள் 'உம்' கொட்டினாள். தொலைக்காட்சியிலும் சில திரைப்படங்களிலும் பேச்சுக்களுக்கு இடையே விஷ வல்கள் வருமே, அப்படி அவன் பேசியதை உருவகப்படுத்திப் பார்த்தாள். மணப்பந்தலில் கிள்ளுக்குப் பதில் கிள்ளு, பார்வைக்கு எதிர்ப்பார்வை, சிரிப்புக்கு புன்னகை. வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசை என்ற பெயரில் நடைபெறும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், இவள், தனது தோழிகளுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்கள், அவனை அண்ணாந்து பார்த்துவிட்டு, இவள் கையை பலமாகக் குலுக்கும் போது, குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள். அப்புறம் முதலிரவில். அதற்கு மேல் அவள் சிந்திக்க நாணப்பட்டாள். எதிர்முனைக்காரனும் அந்த விஷூவல் காட்சியை ரசித்தபடியே ஒரு கேள்வி கேட்பது போலிருந்து. அவள், வேகவேகமாய் பதிலளித்தள்: "நான் ஒண்னும் பராக்குப் பார்க்கலை. நீங்க பேசறபேச்சை கேட்டுட்டுத்தான் இருக்கேன். சாரி.போனை வையுங்க. எங்கப்பா வாரார். மொதல்ல நீங்க கட் பண்ணுங்க... எனக்கு கட்' பண்ண மனக வர மாட்டேங்குது. அய்யய்யோ. இன்னும் ஒரு நிமிஷமா. அப்பா ரெண்டு நிமிஷத்திலே வந்திடுவார். ஆமாம். அந்த கவர்மெண்ட ஆபீஸ்ல ஸ்டெனோ கிராபராகத்தான் இருக்கேன். ஆபீஸர் அறைக்குள்ள அப்பப்போ போய்ததான் ஆகணும். டெலிபோன்ல கனெக்ஷன் வாங்கித்தான் கொடுக்கணும். இது எப்படி எடுபிடி வேலையாகும்? ஆபீஸர், அவரு வேலையைப் பார்ப்பார். நான் என் வேவையைப் பார்ப்பேன். இதில் என்ன