பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சு. சமுத்திரம் கேவலம்? எப்படிங்க முடியும்? சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி கஷ்டப்பட்டு வாங்கின வேலை. உங்களுக்கு, ரெண்டு மாருதி கார் இருக்கட்டும். ஒரு பங்களா இருக்கட்டும். அதுக்காக நான் எதுக்கு வேலையை விடணும்? என்ன... யோசித்துப் பார்க்கணுமா? இதுல யோசிக்கறதுக்கு எதுவுமே இல்லையே.” ஆனாலும், வேதா டெலிபோன் வாயை நெற்றிப் பொட்டில் வைத்து லேசாய் அடித்தபடியே, அவனுக்காக மட்டுமே யோசிப்பதுபோல் யோசித்தாள். அப்படியோசிக்க யோசிக்க, அவள் உறுதி வைரப்பட்டதே தவிர, பித்தளையாகவில்லை. இப்போது உரத்த குரலில் பதிலளித்தாள். நாணமும், பெண்மையும் நாய்களாய் ஒட, அவள் திட்டவட்டமாய்ப் பேசினாள்: “ஸாரி ஸ்ார். என்னால வேலையை விட முடியாது. உங்களோட இருந்தாலும் நான் சொந்தக்காலில் நிற்கவிரும்புறேன். குடும்பத்துக்கு மட்டுமில்ல, சமூகத்திற்கும் பயன்படுறோம் என்கிற சந்தோஷத்தை அனுபவிக்க விரும்பறேன். இதனால தன்னம்பிக்கை ஏற்படுது. இப்படித் தன்னம்பிக்கை ஏற்படுற ஒருத்தியாலதான் கணவன்கிட்ட தூய்மையான அன்பைச் செலுத்த முடியும். இல்லாவிட்டால், அந்த அன்பே ஒரு கலப்படமாகும். என்ன ஸார் உளறுளிங்க. வீட்டில் புருஷன் உசத்தி. ஆபிஸ்ல மேலதிகாரி ஒசத்தி. இதுக்கு ஏன் முடிச்சுப் போடுரீங்க? வேலையை விடமுடியாதுன்னா முடியாது. ஓ.கே. கட்டிக்காட்டாப் போங்க. இப்ப நானே ஒங்களை மறுபரிசீலனை செய்திட்டிருக்கேன். நாமார்க்கும் குடியல்லோம். ஆனாலும் ஒருசின்னரிக்கெஸ்ட். இந்த நாட்ல பொண்ணு பிடிக்கலன்னு மாப்பிள்ளை சொல்ல முடியும். ஆனால், மாப்பிள்ளை பிடிக்கலைன்னு பொண்ணு சொல்ல முடியாது. அதனால. அதோ எங்கப்பா வரார். நீங்களே சொல்லி டுங்க.பொண்ணுபிடிக்கலைன்னு சொல்ல எத்தனையோ காரணம் இருக்கே, உங்களுக்கா தெரியாது? நான் வேலையை