பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'உண்மையில் எறிபவள் ஊரின் பொதுவிடமான பிள்ளையார் கோவில் முகப்பில், பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருமே, அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் உட்கார்ந்திருக்க, சின்ன மனிதர்கள் என்று கருதப்படுகிறவர்கள், அங்குமிங்குமாக நின்று கொண்டிருந்தார்கள். பெரிய மனிதர்கள் வந்து விட்டார்களே தவிர, மகாப் பெரிய மனிதர்கள் இன்னும் வரவில்லை. எப்போது வரவேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த அந்த உள்ளூர் லேட்' தலைவர்களுக்காக போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார யாருக்கும் தைரியம் வரவில்லை. ஒரு நாற்காலியில் உட்காரலாமா என்பது மாதிரி அதன் விளிம்பில் கைவைத்த ஒரு "முன்னாள்” தலைவரை பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு இந்நாள் தலைவர் பார்த்த பார்வையில், பார்க்கப்பட்டவர், நாற்காலியில் அழுக்குப் படிந்திருப்பதை பாார்த்துவிட்டு, மனம் பொறுக்காமல் துடித்ததற்கு அத்தாட்சியாக தன் துண்டை எடுத்து அதைத் துடைத்தார். இதேபோல சின்ன மனிதர்கள்தான் அங்கே நின்றார்களே தவிர, மகா சின்ன மனிதர்களை அங்கே காணவில்லை. வரவேற்பு வளைவை கட்டுவதிலும், தரிசனம் தரப்போகிற அதிகாரிகளுக்கு ராஜ நாற்காலிகளைத் துாக்கிப் போடுவதிலும், தின்பண்டங்களை தயாரிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். இன்னொன்று. இந்த மகாசின்னமனிதர்களில்-பெரும்பாலோர், வயல் வரப்புக்களில் குளத்து மேடுகளில் அல்லாடிக் கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் வரவில்லை. ஏன் வரவேண்டும்?அவர்களுக்குத்தானே அதிகாரிகள் வருகிறார்கள்!