பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மையில் எரிபவள் 19 ஆயிற்று. எல்லாம் வந்துவிட்டன. எல்லாரும் வந்துவிட்டார்கள். ஜீப் சத்தத்தைத்தான் காணவில்லை. அந்தக் காலத்து விருந்தோம்பல் பொருட்களாக, நுங்கிற்குப் பதில் "ஐஸ் கிரீம்”கள், அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இளநீர்களுக்குப் பதில், 'பேனண்டாக்ள்'... பதனீருக்குப் பதில், 'பாம்கோலாக்கள் 'ஒரு கூடை நிறைய பூமாலைகள்... அவற்றின் மேலே செண்டுகள். அவற்றிற்கும் மேலே எலுமிச்சம் பழங்கள். எல்லாவற்றுக்கும் மேலே எலுமிச்சைப் பழம் மாதிரி கண்களைத் துருத்திக்கொண்டு, ஊர் முனையையே பார்த்துக் கொண்டிருந்த பழைய பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், புதிய தலைவராக வரத்துடிக்கும் கனகலிங்கம், பள்ளிக்கூட மானேஜர் இசக்கி முத்து, கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள், பிராஞ் போஸ்ட்மாஸ்டர்ராமகப்பு, நாட்டாண்மை பெருமாள்முதலிய மகாப் பெரிய மனிதர்கள், நாற்காலிகளில் உட்கார முடியாமலும், எழுந்திருக்க முடியாத நிலையிலும் ஆடிக் கொண்டிருந்தார்கள். "பால் ரெடியா இருக்கா” என்றார், பழைய பஞ்சாயத்து. "பேசாமல் டவுனிலிருந்து 'ஆவின்'பாலே கொண்டு வந்திருக்கலாம்” என்றார் புதிய பஞ்சாயத்து. "ரெண்டும் இருந்தாலும் தப்பில்லியே” என்றார் பழைய கர்னம். "இல்லாவிட்டாலும் தப்பில்லை” என்றார்பதவி போனாலும், கர்ணத்திடம் உள்ள பகையை மறக்காத பழைய முன்சீப். "பாலு பத்தாதுன்னு நினைச்சேன். ஏன்னா, ஒரு வேளை... 'ஆர்.டி.ஓவும் 'வரலாமுன்னு தாசில்தார் என்கிட்டே சொன்னார்” என்றார் பழைய பஞ்சாயத்துத் தலைவர்.