பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் எரிபவள் 2 (அதிகாரிகளுக்கு) காய்ந்து கொண்டிருந்தது. தேனுக்குப் பதிலாக, கேசரி புரண்டு கொண்டிருந்தது. இன்னொரு பிரமுகர் வீட்டில், கோழிகள் சதை சதையாக வெந்து கொண்டிருந்தன. திடீரென்று வண்டி வரும் சத்தம் கேட்டது. பெரிய மனிதர்கள் எழுந்து நின்றார்கள். மிகப்பெரிய மனிதர்கள், நான்கடி துாரம் முன்நோக்கி ஓடிப்போய் நின்றார்கள். சின்ன மனிதர்கள், சிறிது ஒதுங்கி நின்று கொண்டார்கள். வந்தது வண்டிதான். காண்டிராக்டர் துரைச்சாமியின் மோட்டார் பைக் வரும்போதே 'இதோ வந்துக்கிட்டே இருக்காங்க என்று சொல்லிக்கொண்டே, வண்டியை அவர் ஒடித்த வேகத்தில், சற்று தொலைவில், போட்டிக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த எருமை மாடுகள்கூட, ஜீப்பை வரவேற்கப் போவதுபோல், ஊர்முனையைப் பார்த்து ஓடின. புதுப்பணக்காரரும், ஒரே சாதியில் "இரப்பாளி வம்சத்த"சேர்ந்தவருமான காண்ட்ராக்டர்மாசானம், ஒரு நாற்காலியில் உட்காரப் போனபோது, சில பெரிய மனிதர்கள், வெற்றிலைச் சாரை வெளியேற்றும் சாக்கில் 'து' என்றார்கள். எல்லோரும், ஜீப்பை எதிர்பார்த்து, கண்களை காக்க வைத்தபோது, நான்கைந்து பேர் தலைகளில் விறகுக் கட்டோடும். புல்லுக்கட்டோடும் வந்து கொண்டிருந்தார்கள். எந்தப் பயல்கள் வந்தாலும் நம்ம பொளப்பு மாறப்போறதில்ல. சீக்கிரமா நடங்கடா என்று ஒரு நடுத்தர விவசாயத் தொழிலாளி முணுமுணுத்தபோது 'தலைக்கட்டு கூட்டம் தன்பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. ஆனால், தலையில் விறகைவைத்திருந்த முனியம்மா மட்டும், அங்கே யாராவது விறகு வாங்குவார்களா என்று நினைத்ததுபோல், நெற்றியில் வழிந்து, கண்களுக்குக்விழப்போன வேர்வையை, வலது கை ஆள்காட்டி விரலால் கண்டி விட்டுக்கொண்டே, எம்பிப் பார்த்தாள். அறுபது வயதுக்காரி, விதவை. சொந்த பந்தம் இல்லாதவள். அவளைப் பார்த்துவிட்ட கண்டிராக்டர் மாசானம், "முனியம்மா. செத்த நேரம் நில்லு. ஒனக்கும் நல்ல காலம் பிறக்கப்போகுது.” என்றார்.