பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உண்மையில் எரிபவள்

23

'பஞ்சாயத்து போட்டிப்' பிரமுகர்களும், டெப்டி ரிஜிஸ்டிரார்மேல், கூட்டுறவு சங்கத் தலைவரும், மாவட்ட சிறு தொழில் அதிகாரிமேல் உள்ளுர் பீடித் தயாரிப்பாளர்களும், என்ஜினியர் மேல் காண்டிராக்டரும், தத்தம் கண்களைச் செலுத்தினார்கள். அவர்கள் பக்கத்தில் போய் உட்கார இடம் கிடைக்குமா என்பது மாதிரி தாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளை தள்ளிக்கூடப் பார்த்தார்கள். மாவட்ட குடும்பநல அதிகாரிமீதுதான், யாரும் கண்வைக்கவில்லை. அவர்தான், கேஸ் கிடைக்குமா என்பதுமாதிரி சற்று தொலைவில் வயிறு உப்பிய பெண்களைப் பார்த்தார்.

சிறிது மெளனம்.

வரவேற்பு நிகழ்த்துபவர்போல், பழைய கூத்தாடியும், இன்றைய பண்ணையாருமான ஒருவர், "ராமன் கால்பட்டு, அகல்யைக்கு விமோசனம் வந்ததுபோல், ஒங்க கால்பட்டாவது இந்த ஊருக்கு விமோசனம் வரட்டும்” என்றார். அவர் சொன்னது சரிதான் என்பது மாதிரி ஊர் பிரமுகர்கள் அத்தனை பேரும் கல்மாதிரி இருந்தார்கள்.

முனியம்மாவுக்கும் மகிழ்ச்சி அதிகரித்தது. ஆபீசர் எஜமான்கள் சிரிக்கிற சிரிப்பைப் பார்த்தால், அவளுக்கும் முதியோர் பென்ஷன் கிடைக்கும் என்று நம்பினாள். 'பணம் மாசா மாாசம் வருமாமே... எப்படியோ... இந்த விறகு வெட்டுற வேலைய நிறுத்தணும். கழிசடத் தொழில். சீ... அப்டில்லாம் பேசப்படாது. பணம் வருதுன்னு கண்ணு மண்ணு தெரியாம ஆடப்படாது. விறகு வெட்டுறது கஷ்டமுன்னால், புல்லாவது வெட்டணும்.”

அதிகாரிகள் அந்தஸ்து எப்படி இருந்தாலும் அதிக அதிகாரங்களை வைத்திருந்த ரெவின்யூ டிவிஷனல் ஆபீசர், "சரி... பட்டுப்பட்டுன்னு ஒங்க குறையைச் சொல்லுங்க” என்றார்.

உடனே ஒரு பிரமுகர், "பள்ளிக் கட்டிடத்துல மழை வந்தால் ஒழுகுது. வேற ஒன்று கட்டிக்கொடுக்கணும்" என்றார். இதற்குப்