பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. க. சமுத்திரம் பதிலளிப்பதுபோல் மாவட்ட கல்வி அதிகாரி, "இங்கே தனியார் பள்ளிக்கூடம் இருக்கு. இதுக்கு நாங்க கட்டிடம் கட்டமுடியாது. கூடாது” என்றார். பள்ளி மானேஜர், பழைய பகையை புதிய விதத்தில் காட்டிப் பேசிய பிரமுகரை முறைத்துப் பார்த்துக்கொண்டே, டெப்டி இன்ஸ்பெக்டரைப் பார்த்து இளித்தார். எல்லோருக்கும் புரிந்துவிட்டது. பள்ளிக் கட்டிடத்தைப் பற்றி பேசினால், மானேஜர் இசக்கிமுத்து இடிந்துவிடுவார். வேண்டாம், நம்ம ஊர்க்காரன். நீண்ட மெளனம். முனியம்மா, தன் அனாதரவான நிலையைக் கூறி, முதியோர் பென்ஷனைப் பற்றி பேசப்போனாள். பிறகு யோசித்தாள். ஊர் விவகாரந்தான் முக்கியம். சொந்த விவகாரம் அப்புறம். பள்ளிக்கூடம் இடிந்து விழப்போவுதுன்னு ஏதோ கேட்டாங்க. அப்புறம் ஏன் பேசாம இருக்காங்க. நாமளாவது யோசன சொல்லணும். பாவம். முன்னால மதுரையில் செத்தது மாதிரி வாழப்போற குழந்தை செத்துடப்படாது. பாரு...' முனியம்மா, சத்தம் போட்டே பேசினாள். "ஏன் சாமி யோசிக்கிய? இசக்கிமுத்து பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க முடியாதுன்னா அதுவே சின்னப் பிள்ளிய எல்லாத்துக்கும் பெரிய சமாதியா ஆயிடும். நீங்களே மடத்துார்ல இருக்கது மாதிரி ஒரு பள்ளிக்கூடத்த ஆரம்பிக்கக் கூடாதா? பிள்ளியளுக்கும் மத்தியானச்சோறு கொஞ்சமாவது கிடைக்கும். இசக்கிமுத்துதான் என்ன பண்ணுவான்? அவ்வளவு வாத்தியாருக்கும் சம்பளம் கொடுக்கணும். அவங்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கதுக்கே படாதபாடு படுறான்.” எல்லோரும், முனியம்மாவைப் பார்த்தார்கள். இசக்கிமுத்து, பல்லைக் கடித்தார். 'கிழவி, சம்பளம் சரியாகக் கொடுக்கவில்லை