பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் எரிபவள் 25 என்பதிலிருந்து மத்தியானச் சாப்பாடு போடாதது வரை சொல்லிட்டாளே. கிழட்டுச் செறுக்கி. இருடி இரு.' முனியம்மா, அப்பாவித்தனமாகச் சிரித்தாள். எல்லோரையும் களங்கம் இல்லாமல் பார்த்தாள். திகைத்துப் பார்த்த அதிகாரிகளை ஒரு தலைவர் திகைக்காமலே பார்த்தபடி, "பாவம் ஏழைக்கிழவி எதையும் தெரியாம பேகவாள்' என்றார். அதிகாரிகள் பயத்தோடு சிரித்தார்கள். முனியம்மா யோசித்தாள். 'பென்ஷனைப் பற்றிப் பேச, இதுதான் சாக்கு சொல்லட்டுமா..? தப்பு. ஊர்விவகாரம் மொதல்ல முடியட்டும்.' பள்ளிக்கட்டிடத்தைப் பற்றி பைசல் செய்யாமலே, "கூட்டுறவு சங்கத்துல எல்லாப் பொருளும் சரியா கிடைக்குதா?” என்றார் கூட்டுறவு அதிகாரி. எல்லோரும் மெளனமாக இருந்தபோது, கூட்டுறவுச் சங்கத் தலைவர், தன் தொடையில் கிள்ளிய வலி தாங்க முடியாத ஒரு பிரமுகர், "எல்லாம் கிடைக்குது. எப்பவும் கிடைக்குது” என்றார். நீண்ட மெளனம். முனியம்மா யோசித்தாள். ஒரு யோசனையும் சொன்னாள். "எங்க சாமி சரியா கிடைக்குது? பெருமாள்தான் என்ன பண்ணுவான்?வெளியூர்ல இருக்கஹோட்டல்காரங்ககூட, அவன் கிட்டவந்து அரிக்கிறாங்க. இவங்க உபத்திரம் தாங்க முடியாம, நேத்துக்கூட, ஒரு முட்டை சர்க்கரையை வண்டிலே ஏத்தி அனுப்புறான். நீங்க நிறைய கொடுத்தால் ஊர்சனத்துக்கும் அவன் ஏதோ கொடுப்பான். இல்லியா..? அதிகமா கொடுங்க சாமி” பிரமுகர்கள், இப்போது முனியம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். 'கிழவி திட்டம் போட்டுப் பேசுகிறாளா? யாரும் தயார் பண்ணி விட்டிருக்காங்களா?