பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 க. சமுத்திரம் முனியம்மா, இப்போதும் களங்கமில்லாமலே சிரித்தாள். சிறிது தைரியப்பட்டவளாய், கூட்டத்திற்கு முன்னால் வந்து நின்று கொண்டாள். அந்தச் சமயத்தில் பழைய பஞ்சாயத்துத் தலைவர், "எல்லா ஊருக்கும் பஸ் வந்துட்டுது. எங்க ஊருக்கு இன்னும் வரல. கொஞ்சம் சீக்கிரமா..” என்று இழுத்தார். போக்குவரத்து சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏதோ பதிலளிக்கப் போனபோது, முனியம்மா குறுக்கே புகுந்தாள். "பஸ்ஸு கிடக்கட்டும். தட்டுப்பாறை ரோட்ட மொதல்ல கவனிங்க. ஊர்த் தெருவைப் பாருங்க... மூணு வருஷமா ஒரு வண்டி மண்ணுகூட அடிக்கல. பஸ் வந்தா திரும்பிப் போவாது.” மாவட்ட என்ஜினியர், காண்டிராக்டரையும், யூனியன் எஞ்ஜினியரையும் ஒரு மாதிரிப் பார்த்தார். மூன்று மாதத்திற்கு முன்புதானே, பத்தாயிரம் ரூபாய் எஸ்டிமேட்டில் வேலை நடந்ததாகப் பில் வந்தது. அவர் ஏதோ சொல்லப்போனபோது, காண்டிராக்டர் கதாரித்துக் கொண்டார். "நம்ம முனியம்மா.திக்கில்லாத கிழவி, முதியோர் பென்ஷன் கொடுக்கணும். பாட்டி விவரமா. அய்யாமாருங்க கிட்ட ஒன்னப் பத்திச் சொல்லு.” முனியம்மா, விவரமாகச் சொல்லப் போனாள். அப்படிச் சொல்வதற்கு ஆயத்தமாக தலையை நிமிர்த்தியபோது, தற்செயலாக வெளியே முப்பது வயது மாயாண்டி சற்றுத் தொலைவில் நொண்டிக்கொண்டே போவது தெரிந்தது. பனை மரம் மாதிரி இருந்தவன்; இப்போ கோணத் தென்னை மாதிரி ஆகிட்டான். நாமாவது விறகு கமந்துபொழைப்போம்; அவன் வேலைக்கு கீலைக்கு போக முடியாமல் அவஸ்தப்படுறான். அவன் விவகாரத்த மொதல்ல பேசலாம்: முனியம்மா, அங்கிருந்தபடியே கத்தினாள்.