பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் எரிபவள் 27

          "ஏய். மாயாண்டி. யாரும் ஒன்ன அடிக்க மாட்டாங்க.      
 சும்மா வாடா. பன்னாரிப்பய மவன். பாக்கான் பாரு. வாடா...   
 ஒனக்கு நல்ல காலம் பிறந்துட்டு. ஒடியாடா. ஒடியா.”
          எல்லாரும், அவளுக்குப்பைத்தியம் பிடித்து விட்டதுமாதிரி, 
 பைத்தியக்காரத்தனமாய் சிரித்தார்கள். முப்பது வயது மாயாண்டி, 
 என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு, முனியம்மாவின் 
 பேச்சுக்குக் கட்டுப் பட்டவன் போல், முதலில் மெள்ள மெள்ள    
 நடந்து, பிறகு வேகமாக வந்தான். வந்தவனின் கையைப் பிடித்துக் 
 கொண்டே, முனியம்மா அரற்றினாள்.
          "பாருங்க சாமி. இவன் ஆறு மாசத்துக்கு முன்னால, அடியும் 
 தலையும் ஒரே மாதிரி ராசா மாதிரி இருந்தான். சொம்மாக் 
 கிடந்தவனை 'குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கடா'ன்னு. 
 இழுத்துக்கிட்டுபோனாங்க.என்ன பண்ணுனாங்களோ தெரியலே. 
 வலிக்குதுன்னு துடிச்சான். அறுத்துப்போட்ட ஆஸ்பத்திரிக்கு 
 பலதடவைபோனான். எல்லாரும் நாளைக்குவாநாளைக்குவான்னு 
 சொன்னதுல. இப்போவ இவன் சாவுறதுக்கு நாளைக்கோ 
 இன்னைக்கோன்னு ஆயிட்டான். பிள்ள குட்டிக்காரன். ஏதாவது 
 பண்ணுங்க சாமி. ஒங்க ஆளுங்க, ஆள அறுக்கதுக்கு காட்டுற 
 வேகத்த, அப்புறம் காட்டமாட்டக்காங்க. பன்னாடப்பய மவனே. 
 எசமாங்ககிட்ட சொல்லேண்டா.”
          மாயாண்டி, பேசத் திறனின்றி தலையைச் சொறிந்தான். 
 இதற்குள் உள்ளுர் பள்ளி ஆசிரியர் ஒருவர், எதுவும் பேசாதே 
 என்பதுபோல், தன் வாயில் ஆள் காட்டி விரலை வைத்து     
 அடித்தார். மாயாண்டி புரிந்து கொண்டான். புரியாத முனியம்மா 
 மாயாண்டிக்காகப் பரிந்து பேசினாள்.
         "பயப்படுறான் சாமி. போன வாரம், இவங்க சேரிக்கும். 
 எங்களுக்கும் சின்னத் தகராறு. எங்க ஆளுங்க, இவங்கள   
 ஊருக்குள்ள வரப்படாதுன்னு. வழியில முள்ள வச்சு அடைச் கட்டாங்க. 
 இவங்க, இப்போ இந்தப் பக்கம் வாரது இல்லே. இவன்