பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 க. சமுத்திரம் எப்படியோ வந்துட்டான். நீங்கதான் இந்த விவகாரத்தையும் தீர்த்து வைக்கணும். சாமிமாரே. இல்லான்னா, சேரி ஆளுங்களுக்கும் எங்க ஆளுங்களுக்கும் சண்ட வந்து, பத்து கொலையாவது விழும். ஏல மாயாண்டி! எப்டி, ஆப்ரேஷன் பண்ணுங்க... அப்புறம் என்ன ஆச்சுன்னு தர்மதுரைங்ககிட்ட. சொல்லுடா. இப்போ சொல்லாட்டா. ஒன் கோளாறு எப்போதான் தீரும்? ஊருக்குள்ளே வந்ததுக்காவ, எங்க ஆட்கள் அடிக்க மாட்டாங்க... கம்மா சொல்லுடா.” ஊர்ப் பிரமுகர்கள், ஒன்றானார்கள். பஞ்சாயத்தின் கடந்த கால, எதிர்காலத் தலைவர்கள், ஒருவரையொருவர் ஆதரவாகப் பார்த்துக் கொண்டார்கள். 'கிழட்டுக் செறுக்கிக்கு என்ன திமிரு இருந்தால், இப்படி பேகவாள். ஊர்க்காரங்களையே காட்டிக் கொடுக்காளே." காண்டிராக்டர், அதிகாரிகளை நோக்கிக் கனிவாகப் பேசினார். 'அடடே... நேரமாகிட்டே... மொதல்ல சாப்பிட்டுட்டு வந்துடுவோம். அப்புறம் பேசலாம்.” எல்லாரும் ஆனந்தப் பரவசத்துடன் எழுந்தார்கள். கோழிகள் கருகிய வீட்டைப் பார்த்து மெல்ல நடந்தார்கள். கூட்டம், மெள்ள மெள்ளக் கரைந்தது. முனியம்மா, விறகுக் கட்டிலில் கைபோட்டு, ஒரு கல்மேல் உட்கார்ந்தாள். மாயாண்டி, அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். விருந்துக்குப் போக முடியாத சிலர், அவளை விரோதத்துடன் பார்த்தார்கள். முனியம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் பேச்சுக்கு யாருமே மறுபேச்சு பேசலியே. ஏன். அதிகாரிங்க பேசல. பாவம், பசியில வந்திருப்பாங்க. சாப்பிட்டுட்டு வரட்டும். இந்த மாயாண்டி பயலைப் பத்தி அடிக்கப் பேசணும். நம்ம பென்ஷனப் பத்தியும் கேக்கனும்: