பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையில் எரிபவள் 29 எங்கேயோ நகரப்போன மாயாண்டியின் வேட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டே "இருடா. இப்ப வந்துடுவாங்க...” என்றாள். ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. தரையின் சூடு தாங்காமல், விறகுக்கட்டே பற்றி எரியப்போவதுபோல் கட்டது. முனியம்மா எழுந்து நின்று எட்டி எட்டிப் பார்த்தாள். அதோ. வாசலுக்கு வெளியே அதிகாரிங்க வந்துட்டாங்க.ஏய் மாயாண்டி நீயும். ஒன்நிலைமையை அடிச்சுக் சொல்லுடா. என்ன இது. ஜீப்பு வண்டிங்க ஊரவிட்டு ஓடுது. போயிட்டாங்களா...ஒருவேள. சாயங்காலம்வருவாங்களோ.பாவம் வெயிலாச்சே." முனியம்மா, மாயாண்டியை போகவிட்டு, தானும் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அதிகாரிகளை வழியனுப்பி வைத்துவிட்டு, ஊர்ப் பிரமுகர்கள் கூட்டம், அவளை நோக்கி வந்தது. முனியம்மா, விகற்பம் இல்லாமல் கேட்டாள். "சாயங்காலம் வருவாங்களா..? காண்டிராக்டர், உடனே பதிலளித்தார். "ஆமாம். ஒன்னப் பார்க்க சாயங்காலம் வாராங்க. ஒனக்கு மாசம் நூறு ரூபாய் பென்ஷன் தருவாங்களாம்.” முனியம்மாவால் நம்ப முடியவில்லை. நூறு ரூபாயா... மாரியம்மா. தெய்வமே. நீ நிசமாவே தெய்வந்தாண்டி அந்தக் மூதாட்டி, வயது வித்தியாசத்தைப் பார்க்காமல், காண்டிராக்டர் காலில் விழப்போனாள். உடம்பு இருந்த சோர்வில், அவளால் அப்படி செய்ய முடியவில்லை. மனம்விட்டு கூவினாள். 'ஏதோ... ஒன் புண்ணியம் ராசா. இந்த மாயாண்டிப் பயலுக்கும்.”