பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 சு. சமுத்திரம்

        "தனி ஆஸ்பத்திரியிலே...காட்டி,  இவனை மட்டும்     
  கவனிக்கப் போறாங்களாம். சாயங்காலம் வரப்போறாங்க.    
  எங்கேயும் போயிடாதீங்க. அறிவு கெட்ட முண்ட... இருக்க இடம் 
  கொடுத்தால், படுக்க இடமா கேக்குற...? திருட்டுச் செறுக்கி..."
       முனியம்மாள் திடுக்கிட்டாள்.பிரமிப்புடன் காண்டிராக்டரைப் 
 பார்த்தாள். அவர்பற்கள், ஒன்றுடன் ஒன்று பிராண்டின. இதற்குள்   
 ஊர்ப் பிரமுகர்கள் வாய்க்கு வந்தபடி கேட்டார்கள்.
          "ஒன்ன... எவன் பேசச் சொன்னான்? சர்க்கரையைப்      
 பற்றிய எதுக்குடி பேசுற? ரோடு எப்டி இருந்தா ஒனக்கென்ன     
 நாயே..? கையெழுத்துக்கூடப் போடத் தெரியாதவளுக்கு பள்ளிக் 
 கூடத்தப்பத்தி பேச என்ன யோக்கிய இருக்கு? சேரிப் பசங்கள 
 வரவிடாமல் வழியை அடச்சத. எதுக்குழா சொன்னே? ஏல...   
 மாயாண்டி எதுக்குல... ஊருக்குள்ள வந்தே...? ஒடுல...ஏய் கிழட்டுச் 
 செறுக்கி! என் நிலத்துல போட்டுருக்க குடிசையை ராத்திரியோட 
 ராத்திரியா எடுத்துடனும். இல்லன்னா... அங்கேயே வச்சு...         
 ஒன்னை எரிச்சுடுவேன்.”
        முனியம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவுமே    
 ஓடவில்லை. 'எதுக்காக திட்டுதாவ. என்னத்த அப்படிச் பெரிசா 
 பேசிப்பிட்டேன். இதனால யாருக்கு நஷ்டம்? அடமாரியம்மா...நான் 
 என்னத்தடி அப்படிப் பேசிப்பிட்டேன். வழியில் கிடக்க ஒனன       
 எடுத்து மடில போட்ட கதையாப் போச்சே. இதுவரைக்கும் ஒரு  
 சொல்கூட வாங்காத என்னை, ஒரேயடியா வாங்கவச்கட்டியேடி..’
        முனியம்மா, தலைதெறிக்க ஒடிக்கொண்டிருந்த  
 மாயாண்டியைப் பார்த்தபோது, தலைவர்களில் ஒருவர், "இப்ப    
 மட்டும் இந்தப் பயலால எப்டி ஒட முடியுது? குடும்பக் கட்டுப்பாடு 
 ஆபரேஷனால நடக்க முடியலன்னு நடிச்சிருக்கான். இந்த      
 கிழட்டுச் செறுக்கியும் எப்டி நடிச்சுட்டாள் பாருங்க... என்றார்."