பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உண்மையில் எரிபவள்

31

      எவரோ ஒருவர் முனியம்மாவை அடிக்கப் போனார். இன்னொருவர் அவரை பிடிக்கப் போனார். சிறிது அமைதி... பிறகு எல்லோரும் போய்விட்டார்கள் ஒற்றுமையாக.
      முனியம்மா ஊர்ப் பெரிய மனிதர்கள் முதுகுகளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். 'எதுக்காவ, பேய்ப்பயலுவ... பேய்மாதிரி ஆடுறானவ? என்ன நடந்தது இப்போ? அதுவும் நானா வரல்லியே. அவன்தான் கூப்பிட்டாள்... பேகனதுல இது இது தப்புன்னு சொன்னால் அர்த்தம் இருக்கு... அர்த்தம் இல்லாம திட்டுறதுல என்ன இருக்கு? குடிசையை வேற எரிப்பேன்னு மிரட்டுறான். எரிச்சால் எரிக்கட்டுமே. ஈமச் செலவு மிச்சம்'.
       அறுபது ஆண்டுகால, உயிர் அங்கேயே பிரிந்து போனதுபோல், முனியம்மா கண்கள் தெறிக்க, நாக்கு துடிக்க, அப்படியே நிலையிழந்து நின்றாள். கண்கள் திறந்திருந்தாலும் எல்லாம் இருட்டாகி, தானும் இருட்டானதுபோல தோன்றியது. சிறிது நேரத்திற்குப் பிறகு விறகுக் கட்டைப் பார்த்தாள். அதுவும் அவள் பேசிய உண்மையைப்போல், மரத்துக் கிடந்தது.
       உண்மை என்ற தர்மத்தை தன்னை அறியாமலே தலையில் ஏற்றுபவள்போல் அவள், விறகுக் கட்டைத் துாக்கி தலையில் வைத்துக் கொண்டு...
       அந்த விறகாலேயே, தன் உடம்பை,தானே எரிக்கப்போகிறவள் போல் போய்க்கொண்டிருந்தாள்.
                                          தினமணிக் கதிர், 18-12-1981