பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டாயமில்லாத காதல்


பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகளை, துள்ளியோட வைக்காமல், அந்தக் கார்நிற்பதுதெரியாமலேநின்றது.வழக்கமாக 'பல்லவன்கள் நிற்பதுபோல் வழிமறித்துநிற்காமல்,பின்னால் வரும் வாகனங்கள் தாராளமாகப் போகும் அளவிற்கு கெளரவமான இடைவெளி கொடுத்து நின்றது. பயணிக்கப் போகிறவர்கள் ஒரு சிலரின் கவனத்தையும் அந்தக் கார் ஈர்த்தது. புத்தம் புதிய கார். மாலை நேர மஞ்சள் வெயில், அதன் மரகத நிறத்தில் படிந்து, அவனையும் அந்தக் காரையும் மின்ன வைத்தது. இடி வாகனங்களுக்குப் பயந்தோ அல்லது அவற்றை எதிர்கொள்ளவோ கர்ணனின் கவச குண்டலம் மாதிரி, முன்னால் பொருத்தப்பட்ட இரும்பு வளையம்... ரதிக்கு மட்டுமே மன்மதன் தெரிவதுபோல், வெளியே இருப்பவர்கள் உள்ளே பார்க்க முடியாமல், கார்வாசிகளை மட்டுமே பார்க்க வைக்கும் பச்சைக் கண்ணாடி...,

டிரைவர் இருக்கையில் இருந்த, ராமச்சந்திரன், இடது பக்கமாக உடம்பை சாய்வுக்கோடாய் நிறுத்தி, அதே பக்கத்து பச்சைக் கண்ணாடியை கீழே இறக்கி, ஒரடித் துக்கலில் விட்டான். அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக நின்ற பழனியம்மாவை குறி வைத்தபடியே, பார்த்தான். அவளோ, கூட்டத்தோடு கூட்டமாய் தொலைவில் வரும் பேருந்து எண்களை அடையாளப்படுத்த, காமிராக்காரர்கள் போல் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் நகர்ந்து கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்த பழைய பல்லவனுக்குப் பதிலாக, வந்தது மகாபலிப்புரத்துகாரன் என்பதால், சோர்வாகத் திரும்பி