பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாயமில்லாத காதல் 33 தற்செயலாகத்தான் அந்தக் காரைப் பார்த்தாள். ராமச்சந்திரன், எதிர்பக்கப் பின்கதவை திறந்தபடியே, அவளை நோக்கி, வா. வா...' என்பதுபோல் முகத்தை கையாக்கி முன்னாலும் பின்னாலுமாய் சமிக்ஞை செய்தான். பழனியம்மா, ஒருகணம், அக்கம் பக்கத்தை அலறியடிக்காதக் குறையாகப் பார்த்தபடியே, கைகளை உதறினாள். மறுகணம், நான் வரல. என்பதுபோல், முகத்தை பக்கவாட்டில் ஆட்டி, அதற்கு முன்னால் நிறுத்திய கைகளையும், எதிர்மறையில் ஆட்டினாள். இதைக் கவனிக்காத ராமச்சந்திரன், வெளிப்படையாகவே உரக்க அழைப்பிட்டான். "ஏறுங்கம்மா." பேருந்துநிலைய இளவட்டங்களில் ஒருசிலர் அழைத்தவனை சந்தேகமாகவும், அழைக்கப்பட்டவளை சபலமாகவும் பார்த்தனர். இன்னும் சிலர், பழனியம்மாவின் மீதும், ராமச்சந்திரன் மீதும், கண்களை மாறி மாறி மொய்க்க விட்டனர். ஆனாலும், பெரும் பான்மையோர், எதிர்வரும் பேருந்துகளையே கவனித்தனர். எதிர்பார்த்த பேருந்து நிற்காமல் ஒடியபோது, ராஸ்கல். இவங்கள நிற்க வச்சு கடனும் என்று ஒரு பெரியவர் முணுமுணுத்தார். இந்த சுடுசொல், தனக்கும் அந்த ராமச்சந்திரனுக்கும் சேர்த்துக் கூறப் பட்டதாக அவள் அனுமானித்தாள், இதனால், பழனியம்மாள், நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்டு, காருக்குள் ஏறினாள். இப்போது, நின்றால்தான் தப்பு. பழனியம்மா, அவசர அவசரமாய் தன்னைத்தானே தள்ளிக்கொண்டு, அந்தக் காரின் பின்னிருக்கையில் ஒடி விழுந்தாள். ராமச்சந்திரன், தனது வலதுபக்க வளைவுக் கம்பியை அழுத்த, இடதுப்பக்க பின்கதவு தானாக மூடிக்கொண்டது. பழனியம்மா, கூண்டுக்குள் போன கிளிபோல் தவித்தாள். பரீட்சைக்கு போகும் மாணவன்போல் கொதித்தாள். பிறகு, ராமச்சந்திரனைப் பார்த்து,