பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 க. சமுத்திரம் எரிச்சலோடு கேட்டாள்.வார்த்தைகளுக்கு உருவம் இருந்தால், அவை இந்நேரம் ஆவியாகி இருக்கும். அவ்வளவு கொதிப்பு. "நான்தான் வரமாட்டேன்னு சொல்லாமச் சொன்னேனே.. போகவேண்டியதுதானே..பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க." இதற்குள், எந்தக் காரையும் இரையாகக் கருதுவதுபோல்,ஒரு கிழட்டு நாயின் ஒலத்தோடு, ஒரு பழைய பேருந்து, காரை மோதாமல் இருக்க, ராமச்சந்திரன், தனது காரை வலது பக்கமாக ஒடித்து, கார்களின்வில்லன்களாய் குறுக்குச்சால் பாய்க்கும் ஆட்டோக்களின் ஒன்றின் பக்கவாட்டை லேசாய் உரசி, இந்த இரண்டுக்கும் பொது எதிரிகளான மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மூன்று சக்கர சுமை வண்டி,முன்னாலும்பின்னாலும்,"கிட்டே வந்து பார் என்று சவாலி டுவதுபோல், கூர்மையான இரும்புக் கம்பிகள் துருத்திக் கொண்டிருக்க, நத்தைபோல் நகர்ந்த மாட்டுவண்டி, மனித இரை தின்னிகளான சென்னை குடிநீர் லாரி ஆகியவற்றை முட்டக் கொடுக்காமலும்,முட்டாமலும், ஒரு சமயம்லாகவமாகவும்,மறுசமயம் முரட்டுத்தனமாகவும், காளில் இயங்கினான். ஆகையால், பழனியம்மா சொன்னது அவன் காதுகளுக்கு, ஒலிகளாக விழுந்ததே தவிர, மூளையில் வார்த்தைகளாகப் பதிவாகவில்லை. இதை, ஆணவம் கொண்ட அலட்சியமாக கருதிய பழனியம்மா, “வண்டியை நிறுத்துங்க.எனக்குப்போகத் தெரியும்" என்றுகத்தியதும், அவனுள் பதிவாகவில்லை. எப்படியோ, காரை வரிசை வரிசையான வாகன ஒட்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்த திருப்தியோடு, அவளை நோக்கி, பின்பக்கமாய் ஒரு திரும்பு திரும்பி, பிறகு முன்பக்கமாக முகம் திருப்பி, அப்புறம் சாலையில் ஒரு கண்ணும், அவளிடம் ஒரு கண்ணுமாய் சாவகாசமாகக் கேட்டான். “ஏதோ பேசினாப்போல கேட்டுது. எப்பவுமே டிரைவர் சிக்னல் நெரிசலில் அல்லாடும்போது, பேசப்படாது, எங்க வக்கீலய்யா மாதிரி, அப்படி இப்படின்னு தொணதொணப்பும்