பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாயமில்லாத காதல் 35 செய்யப்படாது. இது விபத்துல போய் விடும். சரி போகட்டும். என்ன சொன்னிங்க..?” 'நான் வரமாட்டேன்னு சைகை செய்தேனே. நீங்க பாட்டுக்குப் போக வேண்டியதுதானே... கூட்டம் பார்த்த பார்வையில எனக்கு அவமானமாய் போச்சு” ராமச்சந்திரனுக்கு, ரோஷம் வந்தது. அவளை இறக்கி விடலாமா என்பதுபோல், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வரப்போனான். 'இறங்குங்க' என்று சொல்வதற்காக, பின்பக்கமாய் திரும்பினான். அவளோ, அந்தக் காரின் உள்ளழகில் சொக்கிப் போனதுபோல், கண்களை சுற்றவிட்டது, அவனைப் பரம சாதுவாகப் பேச வைத்தது. "ஒரே தெருவுல. அதுவும் பக்கத்து பக்கத்து வீட்ல வேலை பார்க்கோம். எங்கய்யா வீட்ல, தண்ணிர்தட்டுப்பாடுன்னா. அவர், ஒங்கய்யாகிட்ட சொல்ல, நீங்க தண்ணிரை டியூப் வழியா கொடுக்கீங்க. நான் காரைக் கழுவுறேன். ஒங்கய்யா வீட்ல தண்ணி இல்லாதபோது, எங்கய்யாவிட்டு பைப்புல குடிதண்ணிர் எடுத்துட்டு போறிங்க. நானே சிலசமயம், பைப்புல அடிச்சு கொடுக்கேன். இந்தப் பழக்கத்துல, அய்யோ பாவமுன்னு ஏத்துனா. இந்தப்போடு போடுறிங்க...” 'நான் எந்தப்போடும் போடல. பிறத்தியார் தப்பா நினைக்கப்படாது பாருங்க. இதே பஸ் ஸ்டாண்டுலதான், இதே நேரத்துலதான், நான் நிற்கிறது. தினமும், உங்கக் காரு, இந்த வழியிலதான் வரும். நீங்க என்னைப் பார்த்தாலும், பார்க்காதது மாதிரி போவீங்க... இன்னைக்கு மட்டும் என்ன கரிசனம்?” "எங்கய்யாவ ஏத்திக்கிட்டுப் போவேன். அந்தச் சமயத்துல, உங்களை ஏத்துனால், என் சீட்டை கிழிச்சிட மாட்டாரா... இப்போதான், அவர கப்ரீம்கோர்ட் போறதுக்கு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுட்டு வாறேன். தனியா போறோமேன்னுதான், கூப்பிட்டேன்.” 4