பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . சமுத்திரம் 'அய்யய்யோ.” "தப்பா நினைத்தா, இப்பவே இறங்கிக்கலாம்." "தெரியாத்தனமா உளறிக்கொட்டிட்டேன். நீங்க நல்லவருன்னு எனக்குத் தெரியும். நீங்க படுறபாட்டை சொல்லக் கேட்டிருக்கேன், ஒங்க கல்யாணக் கதையும் எனக்குத் தெரியும்.” ராமச்சந்திரன், பின்னால் திரும்பி, பழனியம்மாவை திடுக்கிட்டுப்பார்த்தான்.காரும், திடுக்கிட்டபடியே, தாறுமாறானது. இதற்குள், பின்னால் வந்த கார்களின் கத்தல்கள், கதறல்கள். டே. சாவுக்கிராக்கி என்ற வசவுகள். ராமச்சந்திரன், காரை நெறிப்படுத்தி ஒட்டியபடியே, அவளைத் திரும்பிப் பார்க்காமல், பாதிப்பில்லாமல் பேசுவதுபோல், பாவனை செய்துகொண்டு, கேட்டான். 'சொல்லுங்க பார்க்கலாம். என் கதையில் எனக்குத் தெரியாம எதுவும் இருக்குதான்னு பார்க்கலாம்.” "அய்ந்து வருடத்திற்கு முன்னாலேயே, கிராமத்துவ, அக்கா மகளை கல்யாணம் செய்தீங்க. அவளோ ஒங்களோட வாழ மறுக்காள். நீங்க, கெஞ்சிப் பார்த்தீங்க... மிஞ்சிப் பார்த்தீங்க. அவள் மசியல. சரியா?” ராமச்சந்திரன், தலையை குனித்துக் கொண்டான். இருக்கையின் பின்புறம் லேசாய் தலை சாய்ந்தான். அந்தக் கார், திரைப்படங்களில்-குறிப்பாய்டுயட்பாடல்களில், அரைத்தமாவாய் வருமே, வண்டிச் சக்கரம் மாதிரியான பாலம். அதுதான் அண்ணா சமாதிக்கு அருகே - அந்தப் பாலத்தின் முனையில், சிவப்பு சிக்னலால் நிறுத்தப்பட்டது. அவன், தலை குனிந்தபடியே, கேட்டான். "ஒங்களுக்கு அவளைப் பற்றி இவ்வளவுதான் தெரியுமா?" 'நான் கேள்விப்பட்ட அந்த அசிங்கத்தை, சொல்லிக் காட்டுறது நாகரீகம் இல்ல பாருங்க”