பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாயமில்லாத காதல் 37 'அவளைச் சொல்லியும் குற்றமில்லை. தோளுல குழந்தையாய் தூக்கி வைத்த மாமன், புருஷனாய் வந்துட்டானே என்கிற ஆத்திரம். அக்காக்காரி அழுதாலும், தம்பிக்காரனுக்கு மூளை எங்க போயிட்டுது என்கிற கோபம். இந்த எதிர்ப்பைக் காட்டத்தான், இன்னொருத்தனோட திரியுறாள்.” பழனியம்மா, பேச்சைமாற்றப் போனபோது, போக்குவரத்து சிக்னலில் ஒரு மாற்றம். அதைப் பாராமல் தன்பாட்டுக்கு கிடந்தவனை, அவள் உகப்பிவிட்டாள். "அதோ பாருங்க. பச்சை விளக்கு வந்துட்டுது." அந்தக் கார் மட்டுமே, ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. பழனியம்மா, தன்னை அறியாமலே, ராமச்சந்திரனின் இருக்கை முனையில், இரு கைகளையும் மடித்துப் போட்டபடியே, அவனுக்குப் பூடகமாக ஆறுதல் சொன்னாள். "விட்டுத் தள்ளுங்க. வீட்டுக்கு வீடு வாசல்படிதான். நாம் என்னமோ. நாம் மட்டுமே அதிகமாய் கஷ்டப்படுறோமுன்னு நினைக்கோம். அதுலயும் ஒரு சுகம் தேடுறோம். ஆனால், உலகத்து மனிதர்களோட கஷ்ட நஷ்டங்களை ஒன்று திரட்டி, அதை எல்லோருக்கும் சமமாய் பங்காக்கி கொடுத்தால், பழைய கமையே தேவலைபோலத் தோணுமாம். எங்க பங்களாம்மா, இப்படிச் சொல்வாங்க” "வீட்டுக்கு வீடு வாசல்படின்னு சொன்னிங்களே, எந்த அர்த்தத்துல.” "என் கதை வேற மாதிரின்னாலும், மனநோவுன்னு வரும்போது, ஒங்க கதை மாதிரிதான். ஒருவனுக்கு கட்டிக் கொடுத்தாங்க. குடிகாரனாச்சேன்னு நான் அழுதேன். அரசாங்க உத்தியோகம். கழுதப்பயல்தான். ஆனால், சர்க்கார் கழுதையை மேய்க்கிறானேன்னு, அப்பா சொன்னார். அவர் சொன்னா சொன்னதுதான்.இல்லாட்டால், பப்ளிக்கா அடிப்பார்."எவன் கூடடி