பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 க. சமுத்திரம் திரியுறேன்னும் கேட்பார்.எங்க அக்காளை இப்படிக்கேட்டவர்தான். அப்பாவின் வசவும் அடியும், அவனைக் கட்டிக்கிறதை விட பெரிய அவமானம்.அதோட, எனக்குப்பின்னாலயும்வயகக்கு வந்த இரண்டு தங்கச்சிங்க கூடவே, இந்த மனக இருக்கே, அதையும் சொல்லனும், நிலைமைக்கு ஏற்ப, அது நம்மையும் ஏமாற்றி, ஏமாந்து போகும். அவரைத் திருத்திடலாமுன்னு ஒரு நப்பாசை, ஆனாலும், கல்யாண மேடையில் குவார்ட்டர். மறுவீட்டுக்கு போனால் ஆப். முதல்நாள் ராத்திரியில புல். இதுதான் ஒவ்வொரு நாளும். அவர்கிட்ட நான் கண்டது. எந்தவித ககமும் அதிகமாய் கிடைக்கல. அது குடிச்சால், 'இது அதிகமாய் இருக்காதாம்” பழனியம்மா, அவரசத்தில் அப்படிச் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்தாள். அவனும், அதைக் கண்டுக்காததுபோல், பாவனை செய்துகொண்டே, ஆறுதல் சொல்வதாக நினைத்துப் பேசினான். "நன்மையிலும் தீமையிருக்கு. தீமையிலும் நன்மையிருக்கு. பத்து பாத்திரம் தேய்க்கிற உங்களுக்கு, இப்போ, சர்க்கார் வேலை கிடைக்கிறதுக்கு, காரணமாய் இருந்திருக்காரே” "நான் பாத்திரம் தேய்த்தாலும், பத்தாவது வரைக்கும் படித்தவள்.” "நானும்தான் பிளஸ் டு.” "ஏரோபிளேன்ல போற வேலை கிடைத்தாலும், ஒரு தாலிக்கயிறுக்கு ஈடாகுமா? அதாவது-பிறத்தியார்பார்வையில்." “என் பெண்டாட்டி, தப்புத் தப்பு. அக்கா பொண்ணு கழுத்திலயும்தான், நான், கட்டுன தாலி இன்னும் கிடக்குது.” மீண்டும் மெளனம். ராமச்சந்திரன், கார் ஒட்டுவதில் மட்டுமே கவனமானான். பழனியம்மாவும் முன்னிருக்கை உச்சியில் போட்டகைகளை, பிடரிப்