பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாயமில்லாத காதல் 39 பக்கமாக வளைத்துப்போட்டு, பின்னிருக்கையில் சாய்ந்தாள். அவன் மேற்கொண்டு ஏதும் கேட்டால் பேசலாம் என்ற எண்ணம். பேசவில்லையே என்ற ஆதங்கம். தானே பேசலாமா என்ற சபலம். மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடவேண்டுமென்ற ஆவேசம். அந்தக் கார், சாந்தோம் கடற்கரை தேவாலயத்திற்கு, துவார பாலகர்போல் தோன்றும் சிக்னல் கம்பத்தில், மஞ்சளை மறைத்த சிவப்பால், நிறுத்தப்பட்டது. ராமச்சந்திரன், சலித்தபடியே பேசினான். "ஒரு இடத்துல சிவப்பு விளக்கு விழுந்துட்டால். கடைசி வரைக்கும் சிவப்புதான்." "இதுக்குப் பெயர்தான், பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்கிறது.” "அப்படி ஏன் நினைக்கிறீங்க? பட்டமரமும் துளிர்க்குமுன்னு நினையுங்களேன். எப்படியோ உங்களுக்கு அரசாங்கத்துல பியூன் வேலை கிடைச்கட்டுது. இதை நினைச்சு ஆறுதல் படுங்க.” "அய்யோ! இந்த வேலைக்கு நான் பட்டயாடு,வேலை கிடைச்ச சந்தோஷத்தையே விழுங்கிட்டுது. இருசப்பன், குடிச்சு குடிச்சு செத்தது, தற்கொலைக்குச் சமம். மனைவி பழனியம்மாவது திருத்தி இருக்கலாம். திருத்தல. அதனால, மனிதாபிமான அடிப்படையில அந்த அம்மாவுக்கு வேலை போட்டு கொடுக்க முடியாதுன்னு, ஆபீஸுல, எவனோ ஒருத்தன் கிறுக்கி வச்சதுல, எல்லா கிறுக்கன்களும் கையெழுத்துப் போட்டுட்டாங்க. இதுவும் போதாதுன்னு, நான் கம்பெனி வேலை பார்க்கிறதாயும். சொந்த வீட்ல குடியிருக்கிறதாயும். அதனால, மனிதாபிமான அடிப் படையில், தனக்குத்தான், அண்ணன் இருசப்பன் வேலையை கொடுக்கணுமுன்னு பெத்தவங்க துாண்டுதலுல, அவரோட தம்பிக்காரன் எழுதிப் போட்டுட்டான். எங்க அம்மாவோட,