பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சு. சமுத்திரம் சர்வண்ட் குவார்ட்டர், என்னோட வீடாம். பத்து பாத்திரம் தேய்க்கிறது கம்பெனி வேலையாம். இப்படிச் சொல்லிக் கொடுக்கவும் ஒரு வக்கீலு.” ராமச்சந்திரன், தனது பிடரி பேசுவதுபோல் பேசினான். "அடக்கடவுளே. அப்புறம்.” "எங்கம்மா துாண்டுதலுல, எங்க பங்களாய்யா தலையிட்டு, அவருக்கு இருக்கிற செல்வாக்குல, வரவேண்டிய வேலையை வாங்கிக் கொடுத்தாரு. அப்படியும் மனகல நிம்மதியில்ல." "ஏஏன்? "எனக்கு ஆபீஸுல வேலை வாங்கிக் கொடுக்க, அங்கேயும் சிலர் முயற்சி செய்தாங்க... அந்த முயற்சிக்குப் பலனா, பணம் கேட்டாக்கூட பரவாயில்ல. ஆனால் கொடுக்க கூடாததை கேட்கிறாங்க... சில பிரம்மச்சாரிப் பயல்கள், கல்யாணம் செய்துக்கலாமான்னும் கேட்டாங்க. இவங்கெல்லாம் செத்துப் போன, என் புருஷனையே நல்லவனாக்குகிற அளவுக்கு குடிகாரங்க. இந்தப்பழக்கம் இல்லாதவங்களுலயும் சிலரு எனக்காக இல்ல..என் சம்பளத்துக்காக கட்டிக்கச் சொல்றாங்க.." "அப்போ.. எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்கப் போரீங்க? இப்போ நல்லாத்தான் இருக்கது மாதிரித் தெரியும். நாற்பது வயகக்குமேல அனாதையாய் ஆயிட்டோம் என்கிற உணர்வு ஏற்படும்.” "என்ன செய்யுறது. என்னதான் செய்ய முடியும்?” 'கல்யாணம் செய்தால் பழைய புருஷனால கிடைத்த வேலை போயிடுமேன்னு யோசிக்கிறீங்களா.." 'மனிதாபிமான அடிப்படையில், ஒரு விதவைக்கு புருஷனோடு வேலை கிடைத்து, அவள் மறுமணம் செய்தால்,