பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாயமில்லாத காதல் 4] வேலையிலிருந்து அவளை நீக்கலாமுன்னு, முன்னால சட்டம் சொல்லிச்சாம். ஆனால், இதை எதிர்த்து, பல பெண் இயக்கங்கள், போராடுதுனால, ஒரு விதவை, மறுமணம் செய்தாலும், அவளோட வேலை பாதிக்காதுன்னு சர்க்குவர் வந்துட்டாம்.” "அப்போ. உலகத்துல ஆண்களுல நல்லவனே இல்லியா..? ஒருத்தனை கட்டிக்க வேண்டியதுதானே.” "சரி. ஒங்க அக்கா பெண்ணை என்ன செய்யப் போறிங்க? 'நான் கழிச்சு கட்டுறதுக்கு முன்னாவலேயே, அவளே கழிஞ்கட்டாள். ஆனாலும், மனைவி என்கிற முறையில, அவள் மேல் கோபம் வந்தாலும், அக்கா மகள் என்கிற முறையில, இன்னும் பாசம் இருக்கத்தான் செய்யுது.” ராமச்சந்திரன், கலகலப்பான சிரிப்பை, சோகத்தோடு முடித்தான். அந்தக் காரும், புதிதாய் உருவாகும் அடையாறு மேம்பாலத்தின், கிழக்கே, ஒற்றையடி பாதை போன்ற ஒருவழிச் சாலையில், வாகன நெரிசலுக்குள், முக்கி முனங்கி, ஆவின் பூங்காவைத் தாண்டி, பெசன்ட் நகருக்கு கிளை பிரிந்த சந்தடி இல்லா சாலையில், ஒடுவது தெரியாமல் ஓடியது. இப்போது பழனியம்மா, தன்னை அறியாமலே, வார்த்தைகளை சிந்திவிட்டு, பின்னர், அவற்றை அள்ளமுடியாமல், அல்லாடினாள். “எனக்கு மட்டும், எந்தவித கெட்டப் பழக்கமோ. நோய் நொடியோ இல்லாத, கம்பீரமான, பாசமான, மொத்தத்தில் உங்களை மாதிரி ஒரு நல்லவர் கிடைச்சால்.” ராமச்சந்திரன், திடுக்கிட்டானோ. இல்லையோ, அவன் கார் திடுக்கிட்டு நின்றது. அவளை, அவன் ஒரேயடியாய்த் திரும்பிப் பார்த்தான்.அதுவரைவெறும் மனுஷியாக தெரிந்தவளை, ஒரு இளம் பெண்ணாக, புதிய பார்வையில் பார்த்தான். அவனுக்கு, கையும் ஓடவில்லை. காலும் ஒடவில்லை, காரும் ஒடவில்லை.