பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கட்டாயமில்லாத காதல் 43

 "ஆனாலும், சட்ட விரோதமில்லாத ஒரு வழி இருக்கு. கல்யாணமான ஒருவன், இன்னொருத்திக்கு தாலி கட்டினால் ஜெயிலுக்கு போகணும். அதேசமயத்தில், ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டுல, கூடியும் கொஞ்சியும் வாழலாம். குழந்தைகளும் பெத்துக்கலாம். இந்த ஏற்பாட்டுல, ஆணுக்கு, தன்னோட வாழுற பெண் சொத்துலயோ, பெண்ணுக்கு அவனோட சொத்துலயோ உரிமை கிடையாது. ஆனால், ரெண்டு பேருக்கும் பிறக்கிற குழந்தைகளுக்கு, ரெண்டு பேர் சொத்துலயும் உரிமை உண்டு. சட்ட விரோத தம்பதிங்கன்னு உண்டு. ஆனால், சட்டவிரோதமாய் பிறந்த குழந்தைன்னு கிடையாதாம். இப்படித்தான் சட்டம் சொல்லுதாம்.”
           பழனியம்மா, களிக்கூத்து ஆடினாள்.
          "எங்கம்மாவும், இப்போ நீ நாலாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற, அரசாங்கத்துல வேலை பார்க்கிறே. இனிமேல், நீ என் வீட்டு வேலைக்காரி இல்ல. புதுசா ஒரு வீடு பார்த்து, குடிபோயிடுன்னு சொல்லிட்டாங்க. நீங்கசொல்ற ஏற்பாட்டுல எனக்கு சம்மதம்.”
          "ஆனாலும்.”
          “என்ன ஆனாலும்.”
          "ஒங்களுக்கு நாலாயிரம் ரூபாய் சம்பளம். ஒட்டி கீட்டின்னு வேற. இந்த நாட்டுல ஒரே வேலைக்கு பலவிதமான சம்பளம். அரசாங்க டிரைவருக்கு ஆறாயிரம் சம்பளம். சனி, ஞாயிறு லீவு. போதாதற்கு போனஸ், ஆனால், ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் மட்டும் லீவு எடுக்கிற டிரைவரான எனக்கு இரண்டாயிரத்து ஐநூறு. என்ன நியாயம் இது?”
          "போகட்டும். நம்ம நியாத்த பேசுவோம்.”
         "நாலாயிரத்துக்கும், ரெண்டாயிரத்து ஐநூறுக்கும் ஒத்து வருமான்னு யோசிக்கிறேன்.”