பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 சு. சமுத்திரம்

 "இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். தன்னோட வீட்டுக்காரி, தன்னைவிட எல்லா வகையிலும், மட்டமாய் இருக்கனும் என்கிற நெனப்பு. தெரியாமத்தான் கேட்கிறேன்...  வீட்டுக்காரி புருஷனைவிட அதிகமாய் சம்பளம் வாங்கினால், உலகம் அழிஞ்சுடுமா...? குழந்தை குட்டி பிறக்காதா...? உங்களை எப்படியோ நெனச்சேன். கடைசில நீங்களும் சராசரிதான். தெளிவாய் இருந்த என்மனசை ஒரு கலக்கு கலக்கி, சேரும் சகதியுமாய் ஆக்கிட்டிங்க..."
     "சரி. சரி. புலம்பாம். முன்னால் வந்து உட்காரு...”

     பேச்சு ஏக வசனமாய் போகுது.”
     "வீட்டுக்காரியை எப்படிக் கூப்பிடுவாங்களாம்?”
     "யோவ்! முன் கதவைத் திறக்காமல், எப்படிய்யா உட்காருறது? இந்த சீட்டை தாண்டி குதிக்கச் சொல்றீயா...”
      முன்கதவு திறந்தது. ராமச்சந்திரன், அவளைப் பரவசமாய் பார்த்தபோது, அவள் பரபரப்பாய் கேட்டாள்.
     "என்னால நம்ப முடியலtய்யா. இப்படியும் அரைமணி நேரத்துக்குள்ளே, காதல் வருமா? இந்தக் காதல் எதுவய்யா சேர்த்தி?”
     "இந்தக் காதல் எந்தெந்த வகை இல்வன்னுமட்டும் என்னால சொல்ல முடியும். எதுல சேர்த்தியின்னு சொல்ல முடியாது. இது, உருவக் கவர்ச்சியில ஏற்படுகிற அவசரக் காதல் இல்ல. தற்கொலை செய்கிற புனிதக் காதலும் இல்ல. ஆடல் பாடல்ல அசந்து, ஏற்படுகிற சினிமாக் காதலும் இல்ல. பெரிசுகள்போல் நினைச்சுக்கிட்டு, பள்ளிக்கூடத்து சிறுககள் செய்கிற பால்ய காதலும் இல்வ. பெரியவங்க பேச்சால் ஏற்படுகிற, பாரம்பரியக் காதலும் இல்லை. ஆனால், எந்தவகைக் காதலுன்னுதான் சொல்ல முடியல..."