பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டாயமில்லாத காதல்

"நான் சொல்றேன். வாழ்ந்துதான் ஆகணும் எங்கிறதுகா ஏற்பட்ட கட்டாய காதல். சரியா?” "சரியில்ல பழனிம்மா... இது கட்டாயம் இல்லாத காதல் தான். நாம ரெண்டு வருஷமா, ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறோம். லேசாய் பேசிக்கிறோம். இது உனக்கும் எனக்கும் தெரியாமலே, நம்ம மனசுல, ஒரு ஈடுபாடாய் - ஒரு விதையாய் விழுந்துட்டுது. பயம், கூச்சம்மாதிரியான வறட்டுத் தனங்களையும் மீறி, இதயத்தில் விழுந்த விதை, இப்போ, வாய் வழியாய், காதல் செடியாய்

வளர்ந்திருக்கு. நம்ம காதல், கட்டாயமில்லாத காதலுன்னாலும்,  நெசமான காதல்தான். ஒரு ஆணும் பெண்ணும், ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறது தெரியாமல், ஒரு கட்டத்துல, காதலை 

வெளிப்படுத்துறதான், நெசமானக் காதல், புரியுதா...?

      "புரியுது... புரியுது... அதோட, இருட்டுனுதும் புரியுது. காரை  எடு.”
      அந்தக் கார், இப்போது வெளிச்சத்தோடு ஓடியது- அதுவும் இரட்டை வெளிச்சமாய்.
                                                       வாசுகி - 1991.
                                                                       ©