பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கா... கா... கா...

பண்டாரம் என்னமோ சிவப்புத்தான். என்றாலும், அவனை அந்த அலுவலகத்தில், எல்லோரும் 'காக்கா' என்றே அழைப்பார்கள். உருவத்தையோ நிறத்தையோ பொறுத்த அளவில், அவனுக்கும் காக்காவுக்கும் காத தூரம். சொல்லப் போனால் அவன் விகவாசி. ஆகாயத்தில் வெள்ளைக் காக்கை பறந்தது என்றால் "ஆமாம், நானும் பார்த்தேன்,' என்று சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால் அது ஆபீசருக்குச் சரிநிகர் சமானமாய்ப் பேசியதாய் ஆகிவிடுமாம். ஆகைால், நீங்கள் வெள்ளைக் காக்கையைப் பார்த்ததை நானும் பார்த்தேன்' என்று கீழ்ப்படிதலாகத்தான் சொல்லுவான்.

இந்த அளவுக்குப் பக்குவமாக நடக்கும் பண்டாரத்திடம், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெனரல் மானேஜர், அவன் வசியத்திற்கு மசிவதாகத் தெரியவில்லை. அவன், ஒரு ஜெனரல் மானேஜருக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கக் வடாது என்று நினைத்தானோ, அத்தனையும் புதியவரிடம் இருந்தன. அவரிடம் இருந்த சுயமாகச் சிந்திக்கும் மூளை, நேர்மை, நாணயம், பாரபட்சமற்ற மனப்பான்மை ஆகிய பண்புகள், பண்டாரத்தின் வசிய ைேலக்குக்கடுக்காய் கொடுத்தன. அத்தோடு அவரிடம் பெண் மோகம்' கடுகளவுகடடக் கிடையாது. இதுதான் பண்டாரத்திற்குப் பெரிய வேதனையாக இருந்தது. ஆசாமியை எப்படி மடக்கிப் போடலாம்.?

ஜெனரல் மானேஜர், ஊழியர்களை அறிமுகப் படுத்திக் கொள்வதற்காகவும், அவர்களின் பிரசினைகளைப் புரிந்து