பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏜfᏈ... ᏜfᏈ... ᏜfᎢ... 47 கொள்வதற்காகவும், கான்பரன்ஸ் ஹாலில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். எல்லா ஊழியர்களும் முன்னதாகவே வந்து உட்கார்ந்தார்கள். பண்டாரம், வாசலுக்குப் பக்கத்தில் முதல் வரிசையில் முதல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். ஜி.எம்., தன் அறையிலிருந்து அடியெடுத்து வைத்தார். அவ்வளவுதான், பண்டாரம் அவரை நோக்கி ஓடினான். அவர்கையை இழுத்து ஒரு குலுக்குக் குலுக்கி, அவரோடு நடந்து வந்தான். ஊழியர்கள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால்தான், மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். கரேஷ் மட்டும் 'சீச்சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று பாரதியாரிடம் போய்விட்டு, பிறகு 'இந்தப் பயல், நம்ம வர்க்கத்துக்கே ஒரு அசிங்கம் என்று, என்று பலமாகக் கூற, ஊழியர்கள் சிரித்தார்கள். சிலர் கேவலம் என்றார்கள். ஆனால், ஜெனரல் மானேஜர், பண்டாரம், தன்னிடம் வந்துகைகுலுக்கியத்தைக் கேவலமாக நினைக்கவில்லை. அவன், ஊழியர் சங்கச் செயலாளராக இருப்பான். ஆகையால்தான் தன்னை எதிர் கொண்டு வரவேற்றிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டார். அலுவலர்களிடம் பேசினார் ஜி.எம். உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசர அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். பண்டாரம் அன்று மாலையில் கழுத்துக்கு எண்ணெய் தடவி நீவிக் கொண்டான் என்றால், அவரின் பேச்சுக்கு எந்த அளவிற்குத் தலையாட்டியிருப்பான் என்பதை எடுத்துரைக்க வேண்டியதில்லை. ஊழியர்கள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என்று ஜி.எம். முடிவுரை கூறிவிட்டு பேச்சை முடித்தார். சுரேஷ், ஏதோ சந்தேகம் கேட்க எழுந்தான். அதற்குள் பண்டாரம் ஜி.எம்.மின். அருகில் போய், சோடா வேணுமா சார்? என்று ரகசியமாய்க் கேட்டான். அவர் வேண்டாமென்று தலையாட்டினார். ஊழியர்களின் மத்தியில் ஒரு லஞ்ச் கலகலப்பு. பண்டாரம் ஏதோ யோசனை கூறி இருக்கிறான். ஜி.எம். நிராகரித்து விட்டார்.