பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம்

பண்டாரத்திற்கும் என்னவோ போலிருந்தது. இருந்தாலும் மனத்தைத் தளரவிடவில்லை. அப்போது பார்த்து பியூன், ஜி.எம்.மின் அறையில் இருந்து, ஏதோ செய்தி கொண்டு வருவதுபோல் வேகமாக வந்தான்.பண்டாரம், எழுந்தான்.நடந்தான். பியூனை மடக்கி, அவன் கொடுத்த செய்தியைச் சுமந்து கொண்டு வந்து, ஜி.எம்மிடம், 'உங்களுக்கு போன் வந்திருக்காம் சார்', என்றான். அதற்கு, யார் பேசினாலும், ஒரு மணிநேரம் கழித்து போன் செய்யும்படி, பியூனை ‘ரிப்ளை' செய்யுமாரும், பண்டாரத்திடம் கூறினார். பண்டாரம் எளிமையானவன். ஆகையால்... பியூனுக்கப் பதிலாக, அவனே ஜி.எம். அறைக்குப் போய் போனில் பதில் சொன்னான். போனில் பேசியவரை ஆழம் பார்த்தான். அப்படியாவது ஜி.எம்.மின். வீக்னெஸ் சங்கதிகள் கிடைக்குமா என்று குழைந்தும், இழைந்தும்பேசினான். ஊஹஇம்.பண்டாரம் நேராக ஜி.எம்மிடம் வந்து, அவர் காதிற்கு மட்டும் கேட்கும்படியாக, 'சொல்லிவிட்டேன் சார்', என்று ஒரு பெரிய ரகசியத்தைத் தெரியப்படுத்தினான். அவரும், தாங்ஸ் என்றார். ஊழியர்கள் வெவெலத்துப் போனார்கள். ஆக, புதிய ஆசாமியையும் பண்டாரப் பயல் பைக்குள் போட்டுக் கொண்டானா? அவன் சொன்ன யோசனையை அவர் அங்கீகரித்து விட்டார் போலிருக்கே... இனிமேல் யார் யாருக்கு என்ன ஆபத்தோ? அவன் எத்னை பேரைத் 'தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப் போகிறானோ..? எத்தனை பேருக்கு "பெஸ்டிவல் அட்வான்வலம்ை இன்க்கிரிமென்டும்’ கிடைக்காமல் போகப் போகிறதோ? பண்டாரமும் பொருமினான். இன்னும், அவன், ஜெனரல் மானேஜரைப் பிடிக்க வேண்டிய அளவிற்குப் பிடிக்கவில்லை. அவரும் பிடி கொடுக்க வேண்டிய அளவுக்குக் கொடுக்கவில்லை. எத்தனையோ பேரை ஒரே நாளில் மடக்கிப்போட்டபண்டாரத்திற்கு புதியவர் பிடிபடாமல் இருப்பது, தன்மானத்திற்கும் சுய