பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கா...கா...கா...

திறமைக்கும் விடப்பட்ட சவாலாகத் தோன்றியது. அடிமேல் அடிவைத்தால் அம்மியே நகரும். இந்த ஆசாமி மட்டும் என்ன விதி விலக்கா..?

    மறுநாள் காலை மணி பத்திருக்கும். பண்டாரம் அலுவகத்தின் வாசலுக்கருகே நின்று கொண்டான்.
  எதிரே ஜி.எம். வந்துகொண்டிருந்தார். உடனே ஒரு சிகரெட்டைஎடுத்துப் பற்றவைத்தான்.பராக்குப்பார்ததுக்கொண்டு இருப்பது போல் பாவனை விட்டான். பிறகு அப்போதுதான் ஜி.எம்மைப்பார்ப்பதுபோல பாவ்லா செய்துகொண்டு, சிகரெட்டை டப்பென்று அணைத்து விட்டு, ஆட்டோ ரிக்ஷா மாதிரி உடம்பை ஆட்டிக்கொண்டே,"ஐ ஆம் சாரி சார். நீங்க வருவதைப் பார்க்காமே சிகரெட்டை என்று இழுத்தான். டில்லியில் தன் முகத்தில் படிந்த சிகரெட் புகைகளால் கண் எரிந்து, கண்ணாடி போட்டுக் கொண்ட மானேஜர், அவனைக் கனிவோடு பார்த்து முதுகில் தட்டிவிட்டுச் சென்றார். (பண்டாரத்திடம் இதுவரை புகை பிடிக்கும், கெட்ட பழக்கம் மட்டும் கிடையாது என்பதும், இப்போது பிடித்த சிகரெட்டால் ஒருவாரம வரை, அவன் இருமினான் என்பதும் தெரிவிக்க வேண்டிய சங்கதிகளாகும்)

இதனால், பண்டாரம் ஜி.எம்.மிடம் கொஞ்சம் நெருங்கி விட்டான். என்றாலும் நெருங்க வேண்டிய அளவுக்கு நெருங்கவில்லை. ஜி.எம்.மின் கார் சர்வீஸுக்குப் போயிருப்பதை, கடன் வாங்கிக் காலம் தள்ளும் பியூன் மூலம் பண்டாரம் தெரிந்து கொண்டான். ஒரு ஸ்கூட்டரை நண்பனிடம் ஓசியாக வாங்கிக் கொண்டு, அவர் வீட்டருகே, தலைமறைவாக நின்றான். ஜி.எம், ஒரு டாக்சியைக் கை தட்டி கூப்பிடப் போன சமயத்தில், பண்டாரம் ஸ்கூட்டரோடு தற்செயலாக வருவது போல வந்து, 'ஏறிக் கொள்ளுங்கள் சார், என்று நெளிந்தான். அந்த நெளிவை அவரால் தட்ட முடியவில்லை.