பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 க. சமுத்திரம் இருவரையும் ஒரே வண்டியில் பார்த்த அலுவலர்கள், அதிர்ந்து போனார்கள். ஜெனரல் மானேஜருக்காக அவர்கள் அடித்த 'சல்யூட்களை பண்டாரமும் தலையாட்டி அங்கீகரித்தான். ஜெனரல் மானேஜர், பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை பிஸியாக இருப்பார். யாரும் அவரை நெருங்க முடியாது. கூடாது. பிறகு ஓர் அரைமணிநேரம் ரிலாக்ஸ் செய்வார். மீண்டும் இரவு எட்டு மணி வரை பைல்களைப் பார்ப்பார். இதைப் புரிந்து கொண்ட பண்டாரம், மாலை ஐந்து வரை வெளியே கற்றுவான், சரியாக இரவு ஏழரை மணிக்குத் தன் கதவுகளைத்திறந்துவைத்துக் கொண்டு. பைலை புரட்டுவான். பண்டாரத்தின் அறையைக் கடந்துதான் ஜெனரல் மேனேஜர் படியிறங்க வேண்டும். அந்த வழியாக வரும் அவர் முகத்தை வேறுபுறமாக வைத்துக் கொண்டால், அவரது கவனத்தைக் கவருவதற்காக இருமுவான். நாற்காலியை இழுப்பான். இரவில் தனித்து நிற்கும் ஜி.எம்., தவித்து நிற்கும் பண்டாரத்தைக் கனிவுடன் பார்ப்பார். சில சமயம் மறுநாள் காலையில் இன்னின்ன விஷயங்களைத் தனக்கு நினைவு படுத்தும்படி கூறுவார். மறுநாள் காலையில் அவருக்கு முன்னதாகவே பண்டாரம் அவர் அறையில் 'முன் வீட்டில் உட்கார்ந்து கொள்வான். ஆக, இப்போது பண்டாரம் ஜெனரல் மானேஜரை ஜேபியில் போட்டுவிட்டான். அலுவலகமே அவனைக் கண்டு ஆடியது. புதிய ஜெனரல் மானேஜரிடம் கண்ட நேர்மையாலும், டைப்பிஸ்டுகளைப் பார்த்து பல் இளிக்காத ஒழுக்கத்தாலும், பாரபட்சமற்ற நிர்வாகத் தாலும் ஏற்பட்ட புதிய காற்றை கவாசித்த சில விகவாச ஊழியர்கள் 'ஜி.எம்,கரியமலவாயுவாகிவிடக்கூடாதே என்று வருந்தினார்கள். நாட்கள் நகர்ந்தன. இரவு மணி எட்டாகி விட்டதால், ஜெனரல் மானேஜர், தன் அறையை விட்டு எழுந்தார். பண்டாரம், தன் அறையில் இருமிக் கொண்டிருந்தான்.