பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏜfᏈ... ᏜfᏈ... &Ꮠ/Ꮘ... 5} "என்ன மிஸ்டர் பண்டாரம் டாக்டரைப் போய்ப் பார்க்கக் கூடாது? என்றார் ஜி.எம். 'உழைக்கிறவனுக்கு ஒரு நோயும் வராது. வந்தாலும் போயிடுமுன்’னு நீங்க சொன்னது என் மனசிலே அப்படியே பதிஞ்சிட்டுது சார். இந்த இருமலை உழைப்பாலேயே போக்கிடுவேன்.” "அப்புறம் ஒரு விஷயம். நம்ம ஆபீஸிலிருந்து திறமையான ஒரு இளைஞனை பம்பாய்க்கு மாத்தணுமுன்னு மானேஜிங் டைரக்டர் எழுதியிருக்கார். யாரை அனுப்பலாம். மிஸ்டர் பண்டாரம்? பண்டாரம் சிந்தித்தான். சுரேஷ் பயல் வசமாய் மாட்டிக் கொண்டான்.முகத்துக்கு எதிரேயே'காக்காய் என்கிறவனை விட்டு வைப்பதா? ஒருநாள் உனக்கெதுக்குடா பேண்டும் சட்டையும்? என்று வேறு இவனைக் கேட்டிருக்கிறான். டேய் கரேஷ்! இந்த பண்டாரத்தையா பகைத்தாய்? "மிஸ்டர் பண்டாரம்... யாரை அனுப்பலாம்? சும்மா சொல்லுங்க. தயங்க வேண்டாம்.” "நம்ம சுரேஷ் டயனாமிக் பெல்லோ சார்.” "சுரேஷா. நேற்றே அவர்கிட்ட கேட்டேன். பம்பாய்ல வீடு கிடைக்காது என்று அழாக் குறையாச் சொன்னாரு...” "ஆபீஸ் விஷயத்துல அதெல்லாம் பார்த்தால் முடியுமா சார்? என்னோட சித்தப்பா பம்பாய்ல இரண்டு வீடு கட்டிக்கிட்டு வசதியாய் இருக்காரு. அவருக்கு, லெட்டர் எழுதி கரேஷனக்கு ஒரு போர்ஷனை விடும் படியா ஏற்பாடு பண்ணிடுறேன்.” "அதோடு, சுரேஷ க்குக் கல்யாணம் ஏற்பாடாகப் போகிறதாம். அதனாலே முடியாதுங்கறார்.” 5